காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும்

2-DSC04292[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு 31-10-2012 இன்று வியாழக்கிழமை வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 2013 ஜனாதிபதி பிரதீபா பிரபா தேசிய விருது பெற்ற காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் மற்றும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் எம்.எம்.ஜௌபர் ஆகியோர் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் ஆசிரியர் தின நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பபாளர் எஸ்.சிறிதரன்,காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் மற்றும் அதிபர்களான ஜெஸீமா முஸ்ம்மில்,சத்தார் மற்றும் பாடசாலை  அதிபர்,ஆசிரிய ஆசிரியைகள் ,மாணவ மாணவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு ஆசிரியர் தினத்தில் ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக பாடசாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் கறபித்த ஆசிரிய ,ஆரியைகள் மாணவர்களினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment