Category: Your Kattankudy
-
பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி!
காங்கிரஸ் உயர் மட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்- டெல்லி: நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-
நாக்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணித் தலைவர் பெய்லி உலக சாதனை
– MJ நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஜோர்ஜ் பெய்லி 156 ஓட்டங்கள் குவித்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அவுதிரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ரிக்கி பொண்டிங் 140 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது.
-
வட மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மருத்துவமனையில் அனுமதி
– SHM யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்காவுக்கான தூதர் மைக்கேல் சிசான் நேற்று யாழ்பாணம் சென்றிருந்தார். அவரை சந்தித்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விக்னேஷ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
எனது பார்வையில் கல்முனை மாநகர சபை மேயர் பதவி!
– MSM. பாயிஸ் (சவூதி அரேபியா) கட்சி அரசியலில் ”வெளிப்படைத்தன்மை” என்பது மிக முக்கியமானதாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத அரசியல் செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு மற்றுமொரு உதாரணமே கல்முனை மாநகர சபை மேயர் பதவிக்கான இழுபறி விவகாரமுமாகும். தற்போதைய மேயர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் அவர்கள் ஒரு சிறந்த செயல் வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அதே இடத்தில் பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் மிகவும் ஆளுமை மிக்க ஒருவர் என்பதிலும் எந்த சந்தேகமும்…
-
பெண்கள் முகத்தையும், முன்கைகளையும் அவசியம் மறைக்க வேண்டுமா?
– தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு கடந்த 22.10.2013 அன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டமொன்று நடைபெற்றது. காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ‘பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் அவசியம் மறைக்க வேண்டுமா?’ எனும் தலைப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
-
குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம் – 100 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவு
நோர்வே: வழமையாக குளிர் காலத்தில் சூரிய ஒளி இன்றி இருண்டு கிடக்கும் நோர்வேயின் ஒரு நகரான யூகானுக்கு மூன்று இராட்சத கண்ணாடிகள் மூலம் முதற்தடவையாக இந்த ஆண்டு ஒளி கிடைத்துள்ளது. ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த நகருக்கு, அதனைச் சூழ்ந்துள்ள மூன்று மலைகளால்
-
ஹிட்லரின் ‘கௌரவக் குடிமகன்’ அந்தஸ்து பறிப்பு
ஜெர்மனி: ஜெர்மனியின் முன்னாள் ஆட்சியாளர் அடோல்ஃப் ஹிட்லருக்கு அந்நாட்டின் நகரசபையொன்று, 78 ஆண்டுகளுக்கு முன்னர் அளித்திருந்த ‘கௌரவ குடிமகன்’ அந்தஸ்த்தை தற்போது மீளப் பறித்துக்கொண்டுள்ளது.
-
அமெரிக்கத் தூதுவர்- வடக்கு முதலமைச்சர் சந்திப்பு
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்திற்கு இன்று புதனன்று விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருக்கின்றார்.
-
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி முதற்தடவையாக கிழக்கில் மட்டு விஜயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக புதிதாக பதவியேற்று முதற்தடவையாக கிழக்கு மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இன்று 30 புதன்கிழமை காலை விஜயம் செய்தார். இதன்போது இவருக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொலிசாரினால் வரவேற்பளிக்கப்பட்டது.
-
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவே தனியார் பல்கலைக்கழகங்கள்
உயர் கல்வி அமைச்சர் மட்டக்களப்பு: பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தெரிவாகியும், உள்வாங்கப்படாத ஏனையவர்களுக்கும் கற்கக் கூடிய நிறுவனங்கள் வேண்டும் என்ற வகையிலேயே தனியார், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றன என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
-
பொன்தீவு கண்டல் கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் எற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார்மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பூவரசன்குளம் மற்றும் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் எற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
-
‘அரசின் காமன்வெல்த் பிரச்சாரத்தால் மாணவர்களின் கல்வி பாதிப்பு’
கொழும்பு: இலங்கையில் காமன்வெல்த் மகாநாடு தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளில் மாணவர்களும் அரசாங்கத்தினால் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகின்றது. பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கான வகுப்பேற்ற பரீட்சைகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவிருக்கும் நிலையில், பாடசாலைகளில் கற்பித்தல்,