காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து சாதாரண கட்டணத்தில் சேவையில் ஈடுபடும் கொழும்பு-காத்தான்குடி பஸ் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலைய முகாமையாளர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் மேற்குப் பிராந்திய முகாமையாளர் திலக் விக்ரமசிங்கவின் முயற்சியின் பயனாக இப் பஸ் சேவை சுமார் 1 வருடம் 8 மாதமாக சேவையில் ஈடுபடுவதாகவும் கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கும் -காத்தான்குடியில் கொழும்புக்கும் -சாதாரண கட்டணமாக ரூபாய் 364 ரூபாய் மட்டுமே அறவிடப்படுவதாகவும் மிகவும் குறுகிய நேரத்தில் காத்தான்குடிக்கும் -கொழும்புக்கும் சென்றடைவதற்கு இப் பஸசேவை பெரிதும் உதவுவதாகவும் பஸ் தரிப்பு நிலைய முகாமையாளர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
குறித்த பஸ் சேவை தினமும் காலை 6.50 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு பகல் 3.00 மணிக்கு கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்தை சென்றடைவதாகவும் – கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பகல் -2.00 மணிக்கு புறப்பட்டு இரவு 10.00 மணிக்கு காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைவதாகவும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு ,காத்தான்குடிக்கு வரும் பொது மக்களின் நலன் கருதி சாதாரண கட்டணத்தில் இப் பஸ் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பஸ் சேவையில் காத்தான்குடி ,மட்டக்களப்பு,ஏறாவூர்,செங்கலடி ,ஓட்டமாவடி ,வாழைச்சேனை,ரிதி தென்னை,புனானை,வெலிகந்தை ,செவணப்பிடிய ,மண்ணம்பிட்டிய ,பொலனறுவை,ஹபறனை,தம்புள்ளை,கலேவல ,மெல்சிறிபுர,இப்பாகமுக,குருநாகல்,பொதுஹர,பொல்கஹவல,அளவ்வ,வரகாபொல,நிட்டம்புவ,கடவத்தை,கிரபத்கொடை ,கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்லும் பிரயாணிகள் பயனிக்க முடியும்.



Leave a comment