அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா

kids– பழுளுல்லாஹ் பர்ஹான்

புதிய காத்தான்குடி: புதிய காத்தான்குடி அன்வர் நகர் பாலர் பாடசாலையின் 5வது வருடாந்த விளையாட்டு விழா கடந்த 27 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய மைதானத்தில் அன்வர் நகர் பாலர் பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர், கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா,மட்டக்களப்பு கட்டட திணைக்கள உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.றூஹுல்லாஹ்,கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் மாஹிர் மற்றும் கல்வியலாளர்கள்,பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அஞ்சலோட்டம்,குண்டு நிரப்பல்,எண்ணுவோம் எடுப்போம்,பலூன் உடைத்தல்,நிறம் தெரிதல்,சோடாக் குடித்தல்,இலக்கங்களை அடுக்குதல், விநோத உடை,பந்து பரிமாறல் உள்ளிட்ட பாலர்களின் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது கலந்து கொண்ட 30 பாலர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment