விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் கிண்ணியா நகரபிதா தலைமையில்

g.h.1[1]– ரைஸ்

கிண்ணியா: உலக வங்கியின் நிதி உதவியினூடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் புற நெகும வேலைத்திட்டத்தினுடாக கிண்ணியா நகரசபை முன்னெடுக்கும் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒன்றான கிண்ணியா விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் பழைய ஆஸ்பத்திரி காணியில் இடம்பெற்றது.

நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், பிரதி தவிசாளர் எம்.சீ.சபறுள்ளாஹ், நகரசபை உறுப்பினர்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்படும் விருந்தினர் விடுதிக்கு ஒரு கோடியே 71 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணிகள் உத்தியோகபூர்வமாக நகரபிதா மற்றும் உறுப்பினர்களால் நேற்று ஆர்மபித்து வைக்கப்பட்டது.

விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், பிரதி தவிசாளர் எம்.சீ.சபறுள்ளாஹ், நகரசபை உறுப்பினர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், கிண்ணியா உலமா சபை தலைவர் ஹிதாயத்துள்ளா, தளவைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம், பொது மக்களென அநேகமானோர் கலந்து கொண்டனர்.

g.h.1[1]

g.h.2[1]

g.h.4[1]

Published by

Leave a comment