கொழும்பு: அதிவேக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் பஸ், வேன் சாரதிகளுக்கான விசேட வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதென மோட்டார் வாகன ஆணையாளர் எஸ். ஹரிஸ்சந்திர தெரிவித்தார். கண்டி வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்டி பிரதேச சாரதி பயிற்சி நிறுவன உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு புதிய வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுப்போக்குவரத்து பஸ்கள், பாடசாலை மாணவர்கள், அலுவலக ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கும் வேன்கள் ஆகியவற்றின் சாரதிகளுக்கே இந்த விசேட வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளன. lk
Leave a comment