யன்பு: சவூதி அரேபிய நாட்டில் யன்பு இன்டஸ்ரியல் பகுதியில் வேலை செய்யும் பல நாடுகளை சேர்ந்தவர்களில் இஸ்லாமிய மாத கணிப்பீட்டின் படி முஹர்ரம் மாதத்திலிருந்து துல்ஹஜ் கடைசிவரை அதாவது கடந்த 12 மாத காலப்பகுதிக்குள் 335 பேர் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளதாக யன்பு அஸ்ஸினாய்யா தஃவா நிலையத்தின் பல மொழிகளுக்குமான ஒருங்கிணைப்பாளர் உமர்லெப்பை ஹபீபுர்ர்ரஹ்மான் தெரிவித்தார்.
இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான புத்தகங்கள்,சீடிக்களை பார்த்து அதனை தொடர்ந்து வாராவாரம் நடைபெறும்
மார்க்க விளக்க வகுப்புகளிலும் பங்கெடுத்ததினால் இஸ்லாத்தின்
மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் பிழையான
தகவல்களையும் அடையாளங்கண்டு தங்களது வாழ்கை நெறிகளை இஸ்லாத்தில் பரிபூரணமாக இவர்கள் நுழைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் அதிகமானோர் பிலிபைன் நாட்டைச் சேர்ந்தவர்களாக
இருந்தபோதிலும் இரண்டாவது அதிகப்படியாக எமது இலங்கை
நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இதேவேளை யன்பு இன்டஸ்ரியல் பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள படிலத் தஃவா சென்டரிலும் கூட கடந்த 12 மாத காலப்பகுதிக்குள்
475 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளார்கள்.
புனித இஸ்லாம் மதத்தையும் அது குறிப்பிட்டுள்ளது ஒழுக்க விழுமியங்கள்,வழிமுறைகள் என்பவற்றைப் படித்து உலகளாவிய ரீதியில் பல நூற்றுக்கணக்கனக்கான மக்கள் இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒருவனுக்கு நேர்வழி காட்டுவதும் அல்லாஹ்தான் காட்டாமல் விடுவதும் அல்லாஹ்தான்.அல்லாஹ் நினைத்தால் எதையும் செய்வான். ‘அல்ஹம்துலில்லாஹ்’ – ‘அல்லாஹு அக்பர்’.



Leave a comment