காங்கேயனோடை: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட காங்கேயனோடை பிரதேச வறிய மக்களுக்கு இலங்கை நீர்வழங்கள் சபையினால் வழங்கப்படும் குடிநீரினை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான காசோலை வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காங்கேயனோடை அல்-அக்ஸா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தக் குழுவின் தலைவர் முகம்மட் முஜாகித் தலைமையில் இடம்பெற்றது.
ஹிறா பவ்ன்டேசனின் அனுசரணையுடன் வறிய மக்களுக்கு குடிநீர் காசோலை வழங்கிவைக்கும் இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா ஹிறா பௌண்டேஷனின் பணிப்பாளருமான் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று 50 வறிய குடும்பங்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி பாறூக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்;.
குறித்த காசோலை வழங்கும் நிகழ்வு 4ம் கட்டமாக நடைபெற்றதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முஹம்மட் சஜி தெரிவித்தார்.

![DSCF2883[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/dscf28831.jpg?w=800&h=451)
![DSCF2897[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/dscf28971.jpg?w=800&h=451)

Leave a comment