கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது விபத்து

18.-seattle-car-accident-lawyer-[1]கொழும்பு: கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று பகல் 1.50 மணியளவில் இந்தச் சம்ப வம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பதிவான முதலாவது விபத்திச் சம்பவம் இதுவாகும்.

இந்த விபத்தில் காருக்கும் வீதியின் இருமருங்குகளிலும் உள்ள பாதுகாப்பு வேலிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர் இழப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

நீர்கொழும்பிலிருந்து பேலியகொட நோக்கி வந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது காரில் பெண் ஒருவரும் சாரதியும் இருந்துள்ளனர். வேகமாக வந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து 19.6 மைல் கல் பகுதியில் வைத்து வீதியின் இடது பக்கம் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதுண்டுள்ளதுடன், மீண்டும் வீதியின் வலது பக்க வேலியில் மோதியுள்ளது.

இதனால் காருக்கும் பாதுகாப்பு வேலிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். tk

Published by

Leave a comment