கொழும்பு: பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள 53 நாடுகளின் கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களுடைய பேரணியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
நேற்று (3) ஞாயிறு மாலை ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலாசார பேரணியில் 3750 மாணவர்கள் பங்குபற்றினர். கொழும்பு ரோயல் பார்க்கில் ஆரம்பித்து சுதந்திர சதுக்கம் வரை இந்தப் பேரணி சென்றது.
இதில் நீர்கொழும்பு நிவ்ஸ்டீட் மகளீர் பாடசாலை பிரித்தானியாவையும்- கொழும்பு ஆனந்த பாலிகா வித்தியாலயம் இந்தியாவையும்- குருநாகலை மல்லியதேவ ஆண்கள் பாடசாலை அவுஸ்திரேலியாவையும் – நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரி தென் ஆப்பிரிக்காவையும் பிரதிநிதித்துப்படுத்தின.
சுயாதீன தொலைக்காட்சியுடன் இணைந்து கல்வி அமைச்சினால் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியில் அமைச்சர்கள்- பாராளுமன்ற உறுப்பினர்கள்- வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் ராஜதந்திரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொதுநலவாய நாடுகளின் பிள்ளைகளின் எதிர்காலப் பாதுகாப்பு தொடர்பான மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
![students%20CHOGM%20grand%20Procession%201_copy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/students20chogm20grand20procession201_copy1.jpg?w=640&h=301)
![students%20CHOGM%20grand%20Procession%203_copy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/students20chogm20grand20procession203_copy1.jpg?w=640&h=308)
![students%20CHOGM%20grand%20Procession%204_copy_copy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/students20chogm20grand20procession204_copy_copy1.jpg?w=640&h=313)
Leave a comment