பொதுநலவாய மாநாட்டை குழப்ப நான் முயற்சித்தேனா? தமிழ் பத்திரிகை மீது அஸ்வர் எம். பி. பாய்ச்சல்

azverகொழும்பு: “பொதுநலவாய ஊடக மாநாட்டைக் குழப்ப முயற்சி- அஸ்வரின் செயலுக்கு கண்டனம்” என்ற தலைப்பின் கீழ் நேற்று தமிழ் பத்திரிகை ஒன்று (தினகரன் அல்ல) வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு முற்றும் முரணானது என்று தெளிவாக்க விரும்புகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

எமது ஜனாதிபதி, குறித்த இந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்குச் சமுகம் தராதது தான் கேட்கும் கேள்விகள் அவரை சங்கடத்தில் ஆழ்த்தும் எண்ணத்தினா லாகும் என்று சனல்-4 ஐச் சேர்ந்த ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார். இதனை முற்றிலும் மறுத்த நான், ஜனாதிபதி எவருக்கும் அஞ்சி ஊடகவியலாளர் கேட்கும் கேள்விகளை ஒருநாளும் ஒரு போதும் தட்டிக் கழிப்பதில்லை என்று விடையளித்தேன்.

மனித உரிமைகள் மீறப்பட்டதை இலங்கை அரசாங்கத்தை “சோகம்” விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அவ்வாறாயின் யாழ்ப் பாணத்திலிருந்து 75000 முஸ்லிம்களை ஒரே இரவில் விரட்டியடித்ததை மக்ரே அறிய மாட்டாரா? காத்தான்குடியில் பள்ளிவாசலினுள் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கெபிதிகொல்லாவையில் பாடசாலை சிறுமிகள் பஸ் வண்டியிலிருந்து வெளியே இழுத்தெடுத்து மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமையும் அரந்தலா வையில் பிக்குமார் படுகொலை செய்யப்பட்டதையும் இப்படியான ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறப்பட்ட புலிகளின் செயல்களையும் சோகம் கட்டாயம் விசாரித்தறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ரூபவாஹினி ஆகியவற்றின் முன்னணி செய்தி வாசிப்பாளராக கடமையாற்றிய ரேலங்கி செல் வராஜாவும் அவர் கணவரையும் புலிகள் சுட்டுக் கொன்றதையும் மக்ரே அறியவில்லையா? இப்படியாக ஆயிரக்கணக்கான மனித உரிமைகள் மீறல்களை புலிகள் செய்திருக் கிறார்கள் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டேன். உரத்த குரலில் தான் கேள்வி கேட்டேன். மாநாட்டை குழப்பும் விதத்தில் நான் வேள்விகளைக் கேட்டேன் என்பதில் துளியளவிலும் உண்மை யில்லை. அது முற்றிலும் உண் மைக்குப் புறம்பானது. என்னுடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் தாம் நன்கு உணர்வதாகவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரிச்சர்ட் உக்கு அவர்களே சொன்னார்கள்.

இலங்கையின் கெளரவத்தை காப்பாற்றும் முகமாக நான் கேட்ட கேள்விகளுக்காக ஏனைய ஊடகவியலாளர்கள் என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுத் தெரிவித்தனர். இதனை உங்கள் நிருபர்கள் கண்டு கொள்ள வில்லையா? என்று மிக வருத்தத்தோடு நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஊடக மாநாட்டை எவ்விதத்திலும் குழப்பும் முறையில் நான் செயல்படவில்லை என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

தினகரன்

Published by

Leave a comment