சர்வதேச விசாரணையா? அரசாங்கம் நிராகரிப்பு

bazilகொழும்பு: இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வ தேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவ்வாறான விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று பிரித்தானிய பிரதமர் கமரூன் கோரிக்கை விடுத்திருந்தார். அதனாலேயே அமைச்சர் பசில் நிராகரித்துள்ளார்.

Published by

Leave a comment