கொழும்பு: போட்டித்தன்மை நிறைந்த இந்த ஊடக கலாசாரத்தினை கொண்ட இக்காலத்தில் சமூக உணர்வுடனும், பொறுப்புடனும் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வாசகர் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொண்ட யுவர்காத்தான்குடி இணையத்தளத்திற்கு இரண்டு வயது பூர்த்தியாவதையிட்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாகும், காத்திரமான செய்திகளை சமூக ஒற்றுமையின் நோக்கம் கருதி மேலும் வெளி்க கொண்டுவரவும் தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தச் செய்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது….
ஒரு ஊடகத்தை நடத்துவது என்பது பெரும் சவாலாகும். இன ரீதியாக இன்று ஊடகங்கள் ஒரு சில செயற்பாடுகளை கொண்டனவாக அமைந்திருக்கின்ற நிலையில் அதற்கு சவாலாக சில இணையத்தளங்களும் செயற்படுகின்றன. இது பல்லின சமூகத்தின் தேவைப்பாடுகளாகும்.
குறிப்பாக விரல்விட்டு எண்ணக் கூடிய நம்பகத்தன்மை, யதார்த்தம், உண்மை, இறைவனுக்கு பயந்த செய்றபாடுகள் என்பனவற்றின் பால் பார்வையினை செலுத்துகின்ற யுவர்காத்தான்குடி இணையம் தரப்படுத்தல்களுக்குள் இருக்கின்றது. இதனது வெற்றி இணையத்தள குழுமத்தில் தங்கியிருக்கின்றது. இனம், மொழி ரீதியாக பிரிந்து கிடக்கும் சமூகங்களுக்கிடையில் உறவுப்பாலமாக இந்த இணையத்தளம் வீறு நடை போட வேண்டும் என்பது எனது ஆவலாகும்.
இதனது வெற்றிக்கு பங்களிப்பு நல்கும் பிரதம ஆசிரியர் மற்றும் ஆசிரிய பீடத்தின் அங்கத்தவர்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள், ஊழியர்கள், இவர்களுடன் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் பிராந்திய செய்தியாளர்கள் ஆகியோரை இந்த தருணத்தில் பாராட்டுவதுடன், இந்த இணையத்தளம் நீண்டகாலம் சமூக பற்றுடன் செயற்பட பிரார்த்திப்பதாகவும் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
Published by

Leave a comment