இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை ‘பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!’ எனும் தொனிப்பொருளில் PMGG கொண்டாடியது

PMGG ஊடகப்பிரிவு

unnamed (1)காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள அதன் தலைமையாக மக்கள் அரங்கில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சூறாசபை உறுப்பினருமான AGM. ஹாறூன் இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

இதன்போது கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் பிரதிநிதியாக நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவக் கட்டளைத்தளபதி ரொபின் அல்விஸ், மதிப்புக்குரிய கிரவனாகம ஆரியவங்ஷ தேரோ, முன்னாள் மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மதிப்புக்குரிய வி. பரிபூரனாந்தா முதலியார்,  மதிப்புக்குரிய பாஸ்டர் கிருபைராஜா, நீதிக்கும் சமாதானத்திக்குமான அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் மற்றும் சூறாசபை உறுப்பினர்கள்,  செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தலைமையுரையை நிகழ்வுக்குத் தலை மைதாங்கிய சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி) ஆற்றியதுடன் சமையப் பெரியார்களின் உரைகளுடன் விஷேட உரையும் இராணுவக் கட்டளைத் தளபதியின் உரையும் இடம்பெற்றது.

நிகழ்வுகளை நெறிப்படுத்தி நன்றியுரையையும் வழங்கினார் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபை எதிர்கட்சித் தலைவரும் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி). 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment