கேகாலை: இன்று கேகாலை நகரில் இடம்பெற்ற இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வில் ‘இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்கள், அனைத்து மக்களினரது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்’ என இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்தி மான்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார்.
‘தனது கூட்டில் வாழும் குருவியும் எந்த சங்கடமுமின்றி சுதந்திரமாக வாழும் உரிமை அதற்கு இந்நாட்டு மக்கள் வழங்க வேண்டும்’ எனவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டுப் பிரஜைகள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், இராணுவ அணிவிகுப்பு மரியாதையும், மாணவர்களின் கலை நிகழ்ச்சி அணிவகுப்புக்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment