Category: Your Kattankudy
-
வருடாந்தம் 6 இலட்சம் சவூதி நாட்டவர்கள் தொழில் சந்தையினுள் பிரவேசம் – திண்டாடுகிறது சவூதி அரசு
–அபூஹக்- சவூதி: வருடாந்தம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்யும் 6 இலட்சம் சவூதி நாட்டவர்கள் தொழில் சந்தையினுள் பிரவேசிப்பதாகவும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் சவூதி அரசாங்கம் பாரிய சவால்களை எதிநோக்குவதாகவும் சிரேஷ்ட தொழில் அமைச்சு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
-
நள்ளிரவில் மயானத்தில் நின்றிருந்த இளைஞைர்கள் – பிணமொன்றை தோண்டி எடுக்கச் சென்றிருக்கலாம் என சந்தேகம்
-அபூஹக்- வெலிமட:மண்வெண்டியொன்றை எடுத்துக்கொண்டு வெலிமட, புஹுல்பொல பொது மயானத்தில் நின்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படும் இளைஞைர்களுள் ஒருவரை பொது மக்களின் உதவியுடன் கைது செய்துள்ளதாக வெலிமட பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கிடையாலான ஆக்கத்திறன் போட்டிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது.
-அபூஹக்- கலை மற்றும் கலாச்சர அமைச்சினால் 2014ஆம் ஆண்டுக்கான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கிடையாலான ஆக்கத்திறன் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
-
கிண்ணியா நகரசபையின் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல்
(ரைஸ்) கிண்ணியா நகரசபை முன்னெடுத்துவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று நகரசபை கேட்போர் கூடத்தில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் கிண்ணியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்களில் ஒப்பந்தகாரர்களாக வேலைகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டதோடு அவர்களின் தற்போதைய வேலைகளின் நிலைமைகளை ஆராயும் விதமாக அமைந்தது.
-
அனைத்து சமூகங்களினதும் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் மூலமே சர்வதேச தலையீடுகளை தவிர்க்க முடியும் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் ஊடக அறிக்கை
PMGG ஊடகப்பிரிவு உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச தலையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியனவா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தற்போது உச்ச நிலைக்குச்சென்றிருக்கின்றன. இச்சூழ்நிலையில், தற்போது நாடு எதிர் நோக்கியிருக்கும் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தற்காலிக வழிவகைகளைத் தேடுவதை விடுத்து பிரச்சினைகளின் அனைத்துப் பரிமாணங்களையும் கவனத்திற் கொண்டு முழுமையான நிரந்தரத் தீர்வினை நோக்கி நகர வேண்டியது ஒரு தேசிய கடமையாக மாறியிருக்கிறது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரட்டை கொள்கையினை கடைபிடிக்கும் ஒரு கட்சி
இர்ஷாத் றஹ்மத்துல்லா கட்சிகள் என்பது மதம் அல்ல, அதன் சட்டதிட்டங்கள் ஆறறிவு கொண்ட மனிதனால் இயற்றப்பட்டது. மனிதன் என்பது தவறையும், தடுமாற்றத்தையும் கொண்ட நிலையற்றவன். அவனுள் பல்வேறு குறைகளை, சில நிறைகளையும் காணலாம். இந்தநிலையில் மனிதன் வாழுகின்ற இந்த பூமியில் சில விடயங்களை அமைப்பு ரீதியாக பெற்றெடுப்பதற்கே இயக்கங்களும், கட்சிகளும் உருவாகின. இலங்கை தேசத்தை பொறுத்தவரையில் பலக்கட்சிகள் தமது அரசியல் சித்தாந்தங்களையும், மக்கள் நலன் குறித்த பிரக்ஞ்சைகளையும் அவ்வப்போது வெளியிட்டுவருகின்றன.
-
மு.கா வினதும் அஷ்ரபினதும் நாமத்தை உரைக்க ரிஷாத்திற்கு அருகதையில்லை. மு.கா.வின் மூத்த போராளி தந்தை ரஹீம் எச்சரிக்கை
பழுலுல்லாஹ் பர்ஹான் வன்னி: அரசியல் அநாதைகளாக்கப்பட்ட இந் நாட்டு முஸ்லிம்களை தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக 1989 காலப்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முதல் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியையும் அதன் சின்னமான மரத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் .
-
பெஷில் ராஜபக்ஷ சவால் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
பழுலுல்லாஹ் பர்ஹான் கம்பஹா: லிய அபிமன் நடவடிக்கை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த பெஷில் ராஜபக்ஷ சவால் கிண்ண கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 22 மற்றும் 23ம் திகதிகளில் கம்பஹா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
-
கட்டாரில் ‘ சீதனமும் சமுதாயச் சீரழிவும் ‘ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிசாரின் நலன் கருதி இரண்டு மலசல கூடங்கள் நிர்மாணிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல வருடங்கலாக இயங்கிவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பல்வேறு சமூக சேவையில் ஒர் அங்கமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் பெண் பொலிசாரின் நலன் கருதி புதிதாக இரண்டு மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பெண் பொலிசாருக்காக நிர்மாணிக்கப்பட்ட இவ் இரண்டு மலசல கூடங்களை கையளிக்கும் நிகழ்வு 25-03-2014 செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.
-
ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வரும் எம் சகோதரர்களை அரசியல் சுயலாபங்களுக்காக பிரித்தாள நினைப்பது படு பாதகமாகும் – அல்ஹாஜ் யூ.கே. நாபீர்
அ. ரஹ்மான் கல்முனை: தற்போது கிழக்கு மாகாண அரசியலில் அதுவும் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்து வலுப்பெற்று வரும் கோரிக்கையான சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்குவது தொடர்பாக நாபீர் சமூக நலன்புரி அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான அல்ஹாஜ் யூ.கே. நாபீர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில். முப்பத்தைந்து வருட எமது சாய்ந்தமருதிர்க்கான பிரதேச சபை கனவை சிதைக்க நினைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு இன்னும் எமது சமூகத்தில் அங்கீகாரமா? நிச்சயமாக இவ் வியாபாரிகளுக்கு இடமளித்தல் கூடாது.
-
காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஏப்ரல் மாதம் 25ம் திகதி விஷேடமாக காத்தான்குடியில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு கடந்த 22.03.2014 அன்று விஜயம் செய்த போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் அவர்கள் காத்தான்குடியிலிருந்து காணாமல் போன 137 பேருடைய உறவினர்களை அழைத்துச் சென்றிருந்தார்.