காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஏப்ரல் மாதம் 25ம் திகதி விஷேடமாக காத்தான்குடியில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு கடந்த 22.03.2014 அன்று விஜயம் செய்த போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் அவர்கள் காத்தான்குடியிலிருந்து காணாமல் போன 137 பேருடைய உறவினர்களை அழைத்துச் சென்றிருந்தார்.

மேலும் அவர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க 1990 களில் குருக்கள்மடத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் இடங்களை காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேரில் சென்று பர்வையிட்டதுடன் காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நேற்று திங்கட்கிழமை கொழும்பு சென்று ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், செஞ்சிலுவைச் சங்க ICRC உறுப்பினர்கள் ஆகியோருடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டார். 

unnamed

இதன் போது குறித்த இடங்களில் உள்ள புதைகுழிகளை தோண்டுவது எவ்வாறு, மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்குரிய மரபணு சோதனைகளை எவ்வாறு மேற் கொள்வது என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் இதற்குரிய நிதி உதவிகளை UNDP வழங்கும் எனவும் ICRC யினரின் மேற்பார்வையின் கீழ் இது இடம்பெறும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களின் வேண்டுகோளின் படி காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி விஷேடமாக காத்தான்குடிக்கு விஜயம் செய்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளையும் மேற் கொள்ளவுள்ளது. 

unnamed (1)

Published by

Leave a comment