காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல வருடங்கலாக இயங்கிவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பல்வேறு சமூக சேவையில் ஒர் அங்கமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் பெண் பொலிசாரின் நலன் கருதி புதிதாக இரண்டு மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பெண் பொலிசாருக்காக நிர்மாணிக்கப்பட்ட இவ் இரண்டு மலசல கூடங்களை கையளிக்கும் நிகழ்வு 25-03-2014 செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.காலித் ஜேபியினால் பெண் பொலிசாருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மலசல கூடங்கள் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.கே.பி.டப்ளியூ. ரணசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.பி.கே.பி.டப்ளியூ. ரணசிங்க, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.காலித் ஜேபி, அதன் பிரதித் தலைவர் எம்.ஐ.சுபைர், அதன் செயலாளர் மௌலவி அஷ்ஷேய்க் அல்-ஹாபிழ் றமீஸ் ஜமாலி , சம்மேளன உறுப்பினர் எம்.ஐ. ரஹீம் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நிதியுதவியுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஆண் பொலிசாருக்கு இரண்டு மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment