றியாத்: நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின்படி, இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வரைக்குமுள்ள காலப்பகுதியில் நண்பகல் 12 மணியிலிருந்து பகல் 3 மணிவரைக்கும் வெளியில் வேலை செய்வது தடை செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் தொழிலமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக, எண்ணெய், வாயு (Oil, Gas) தொழிற்சாலைகள் மற்றும் வீதியோர பணியாளர்கள் அனைவரும் மதிய நேரத்தில் வேலை செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தியகிழக்கு நாடுகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அதி உஷ்ண காலநிலையைக் கருத்திற்கொண்டு இச்சட்டம் அமுல்படுத்தப்படுவதாக சவுதி அரேபியாவின் தொழிலமைச்சு அறிவித்துள்ளது.
Published by

Leave a comment