எரிகிறது…தர்ஹா நகர்!

aluthgamaதர்ஹா நகர்: தர்ஹா நகரில் இளைஞர்கள் பள்ளிவாயில் கூடியிருந்தவேளையில், ஊரடங்குச் சட்டம் அங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பேரினவாதக் குழுவினர், முஸ்லிம்களின் வீடுகளைத் தீக்கிறையாக்கி வருகின்றனர்.

பள்ளிவாயலுக்குள் ஆண்களும், இளைஞர்களும் இருப்பதால், தனிமையில் வீடுகளிலிருக்கும் பெண்களும், பிள்ளைகளும் என்ன ஆனார்கள் என்று அறியமுடியாமலிருப்பதாக தர்ஹா நகர் பள்ளிவாயலுக்குள் இருந்து ஒரு சகோதரர் தெரிவித்தார்.

தாங்கள் அறியப்பட்டவகையில் இதுவரைக்கும் இருபது இடங்கள் தீப்பற்றி எரிவதாகவும், அவற்றுள் வீடுகளும் கடைகளும் எரிந்துவருவதாகவும் அவர் தெரித்தார்.

Published by

Leave a comment