கொழும்பு: ஹலால் எப்போது எமது நாட்டில் விட்டுக் கொடுக்கப்பட்டதோ, அன்றுடன் முஸ்லிம்களின் உரிமைகள், மானம், மரியாதை எல்லாம் பேரினவாதத்துக்கு விட்டுக்கொடுக்கப்பட்டு விட்டது.
ஜனாதிபதி நாட்டில் இருந்தபோதிலும் சரி, இல்லாத போதிலும்சரி முஸ்லிம்களின் மீதான போராட்டங்கள் அண்மைக்காலமாக இலங்கையில் படுமோசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளை முஸ்லிம் சமூகத்தின் முன்னிலையில் பல மிம்மபர்கள் பொறுமையைக் கையாளுமாறு முழங்கலாம். ஆனால் இன்றிரவு களுத்துரை, பேருவளை மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கு இந்த முழக்கங்கள் ஈடாகாது!கிரிக்கட்டுக்கு விடும் அறிக்கைகள், முஸ்லிம்கள் தாக்கப்படும்போது மட்டும் ஓடி ஒழிந்துகொள்கின்றன.
குழந்தைகளுடன் பெண்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நாலு சுவர்களுக்குள் அல்லாஹ்வை மாத்திரம் துதித்துக்கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில் எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளாளோ, எந்த மிம்பர்களாளோ இம்மக்களைக் காப்பாற்ற முடியாது.
பேரினவாதத்தின் பிடியில் குறிப்பாக கடந்த இருவருடங்களாக இலங்கை முஸ்லிம் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் இனிமேலும் இவ்வாறு முஸ்லிம்கள் இலங்கையில் இருந்தால், பர்மாவின் நிலைபோலவே ஏற்படும்.
பிடவை உடுக்கவேண்டிய எமது முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல்வாதிகளின் மந்திர ஜாலங்களில் இருந்து விடுபடவேண்டிய தருணம் இது.முஸ்லிம் மக்கள் இத்தகைய நயவஞ்சக முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராட வேண்டும். இவர்களின் தொடர் மௌனங்களுக்கு எதிராக அடையாள ஹர்த்தால் ஒன்றையாவது ஏற்படுத்தி, இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையையும், பலத்தையும் வெளிக்காட்டி, இத்தகைய போலி முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும்.
குறிப்பு: குறித்த சம்பவங்களுடன் உடனடியாக களத்திற்கு விரைந்து, குரல் கொடுத்த அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுள்ளனர். அல்-ஹம்துலில்லாஹ்!
Published by


Leave a comment