கொழும்பு: இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக இலங்கை புலனாய்வுத்துறைக்கு சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலிபான் தீவிரவாதிகள் இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருவதாகவும் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள இல்ஙகையை ஒரு தளமாக பயன்படுத்தி வருவதாகவும் இண்டர்போல் எச்சரித்துள்ளது.
இலங்கையில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு வல்லுநரான ரோகன் குணரத்னா கூறியுள்ளார்.
காத்தான்குடியிலும், கொழும்பிலும் சில அல்காய்தா தீவிரவாதிகள் இருப்பதாக முஸ்லிம்களின் எதிரிகள் கூறிவருவதாக நம்பகமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
காத்தான்குடியை எப்படியும் பந்திக்கு இழுக்கவேண்டும் என்கின்ற சிலரின் (ஊடகங்களுக்கு) வாய்களுக்கு மெல்லக்கிடைத்த அவல்போன்று இந்தச் செய்தி அமைகிறது.
Published by

Leave a comment