சங்கக்காரவைத் தொடர்ந்து அன்ஜலோ மெத்யூஸூம் லோர்ட்ஸில் சதம் பெற்றார்!

mathews– MJ

லண்டன்: இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் சதத்தை கிரிக்கட் பிறந்த மைதானத்தில் பெற்றுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் இலங்கையின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தனது மற்றுமொரு சதத்தை லோர்ட்ஸ் மைதானத்தில் பதிந்தார்.

தற்பொழுது முதன் முதலாக இலங்கை அணித் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தனது சதத்தையும் லோர்ட்ஸ் மைதானத்தில் பதிந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 3 சதங்களை மெத்யூஸ் பெற்றுள்ளார். உலக கிரிக்கட் வரலாற்றில் லோர்ட்ஸ் மைதானத்தில் பெறப்படும் சதங்கள் லோர்ட்ஸ் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

mathews

Published by

Leave a comment