Category: Your Kattankudy
-
பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது விழா: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை (ஒலிவடிவம்)
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் றமழான் மாத ஒன்று கூடல் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையின் முழுமையான ஒலிவடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் கொல்லப்பட்ட சவூதி மாணவியின் ஜனாஸாவைப் பெற, பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் விமான நிலையத்தில்…
– MJ அல்-ஜவ்ஃப்: கடந்த செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்தின் எசக்ஸ் பல்கலைக்கழக மாணவி நாஹிட்அல்மானியா எனும் 31 வயதுடைய சவுதிப்பிரஜை, கொல்செஸ்டர் எனும் இடத்தில் பலமாக குத்தப்பட்ட கொலைசெய்யப்பட்டார். அவரது ஜனாஸா நேற்று சனிக்கிழமை அல்-ஜவ்ஃப் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தது.
-
புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் முறிந்து விழுந்தது!
புத்தகயா: புத்தகயாவில் உள்ள போதி என்ற இடத்தில் புத்த பெருமான், 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளை நேற்று முறிந்து விழுந்தது. மன்னர் வம்சத்தில் சித்தார்த்தனாக பிறந்து புத்த மதத்தை தோற்றுவித்தவர், கௌதம புத்தர்.
-
பௌத்த பிக்கு ஒருவர் கொலை
கொழும்பு: அலஹர பிரதேசத்தின் விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அலகொட தம்மர ரட்ன என்ற 47 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர், ஹிரட்டியே புன்யாவர்தனாதிபதி என்ற விஹாரையின் விஹாராதிபதி ஆவார்.
-
‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ மாபெரும் இரத்ததான முகாம்-மட்டக்களப்பில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் 21-06-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி –பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2014 சாதனையாளர் பாராட்டு விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிபள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2014 சாதனையாளர் பாராட்டு விழா 21-06-2014 நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும் நாள் விரைவில்…
– A. அப்துல் ஹமீட் கொழும்பு: இலங்கை வரலாற்றைப் புரட்டிப்பார்க்காமல், சில்லறைக் காசுகளுக்கும் சொத்துக்களுக்கும் ஆசைப்பட்டு, அரசியல் உயர்பீடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவுக்கு முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும் நாள் மிக தொலைவில் இல்லை!
-
ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் அவர்களின் போக்கும் நோக்கும்
– சம்மாந்துறை அன்சார் கொழும்பு: ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கும் அஸ்வர் அவர்களை திட்டித் தீர்க்காத வாய்களே இல்லை என்றுதான் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு முகநுால்வாயிலாகவும், இணையத்தள செய்திகள் வாயிலாகவும் மக்களது உணர்ச்சிகளைப் பார்க்கும் போது தெரிகின்றது.
-
இலங்கையில் முஸ்லிம்களின் ஹர்த்தாலுக்கு முக்கியத்துவமளித்து அரேப் நியூஸ் வெளியிட்டுள்ள அசத்தலான செய்தி…!
றியாத்: இலங்கையில் பேரனவாதிகளின் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுவரும் இலங்கை முஸ்லிம்கள், கடந்த 19-06-2014 வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் பிரமாண்டமான ஹர்த்தால் ஒன்றை, இத்தகைய குழுக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் மேற்கொண்டிருந்தனர். இந்த ஹர்த்தாலை விசேட தலைப்பிட்டு அரேப் நியூஸ் இணையத்தளம் அழகிய செய்தியொன்றை தொகுத்துள்ளது.
-
இன்னும் எரிப்பார்கள்…!
– ஏ.கஸ்ஸாலி கொழும்பு: இன்று முஸ்லிம் என்ற காரணத்தால், முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையமான நோலிமிட், பானந்துறையில் எரிக்கப்பட்டு சாம்பலாகி இருக்கின்றது. இக்காலம் இலங்கை முஸ்லிம்கள் உரிமைகளுக்கான அச்சுறுத்தலின் உச்சகட்டமென உலக ஊடகங்கள் எச்சரித்திருக்கும் நிலையில்,
-
எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு உறுதி!
– SHM கெய்ரோ: எகிப்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.எகிப்தில் மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
-
‘பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது’!!– ஜனாதிபதி
கொழும்பு: பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற,ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.