Category: Your Kattankudy
-
மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது
– SHM கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர்.கடந்த மார்ச் 8-ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது.
-
‘எம்மீது நிகழ்த்தப்பட்டது சாதாணர இனவாதத் தாக்குதல் மட்டுமன்றி ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும்’ என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
PMGG ஊடகப்பிரிவு அளுத்கம: ‘கடந்த 15ம், 16ம் திகதிகளில் பொது பல சேனா மற்றும் ராவண பலயா போன்ற பேரினவாத பௌத்த திவிரவாத அமைப்புக்களினால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம மற்றும் தர்ஹா நகர் பிரதேச முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஒரு இனவாதத் தாக்குதல் மாத்திரமல்ல அவை முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதலுமாகும். அதற்கான மறுக்க முடியாத சான்றுகள் இங்கே களத்தில் இருக்கின்றன’ என குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்…
-
இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன இயந்திரம் காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜேர்மன் நாட்டில் இருந்து 02 இரண்டு கோடி ரூபா செலவில் இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன தொழிநுட்ப்பத்திலான இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 24-06-2014 இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்றது.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு எதிரான வழக்கு வாபஸ்
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு எதிரான வழக்கு எந்தவித நிபந்தனையுமின்றி இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் செயலாளரான பி.எம்.முர்ஷிதீனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே வாபஸ் பெறப்பட்டது.
-
கத்தாரில் தென்னிந்தியப் பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரியின் பல மார்க்க நிகழ்வுகள் – SLDC ஏற்பாடு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) தோஹா: புனித ரமழானை முன்னிட்டு கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (SLDC) ஏற்பாட்டில் பல மார்க்க சொற்பொழிவுகள் பிரபலமிக்க உலமாக்களால் நிகழ்த்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் உப செயலாளர் மௌலவி ஏ.சீ.என்.முஹம்மத் (அப்பாஸி) தெரிவித்தார்.
-
குருக்கள்மடம் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியை தோண்டுவதற்கு நீதிபதி ஏ.எம். றியாழ் உத்தரவு
பழுலுல்லாஹ் பர்ஹான் குருக்கள்மடம்: மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 1990 காலப்பகுதியில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் நேற்று 23 திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
அளுத்கம இன வெறியாட்டத்திற்கு தூபமிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே இன சகவாழ்வை ஏற்படுத்த முடியும் – கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை
பழுலுல்லாஹ் பர்ஹான் அளுத்கம: இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்கள் காலம் தொட்டு பல்லாண்டு காலமாக இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே நல்லுறவு நிலவுகிறது. இந்நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் சமாதானத்தையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர்.
-
குருட்டு தேவதையின் இருட்டு நியாயங்கள்
– பிரகாசக்கவி முதலை விழுங்கிய ஆடு ஒன்றின் பிழுக்கை கிளறி பகுப்பாய்வு நடக்கிறது விழுங்கப்பட்டது
-
காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் 2014 வருடாந்த பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் 2014ம் ஆண்டுக்கான வருடாந்த பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 23-06-2014 நேற்று திங்கட்கிழமை மாலை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
-
உலகக் கிண்ணம்-2014: போட்டிகளில் பயன்படுத்தும் ‘வெனிஷிங் ஸ்ப்ரே’ …
– MJ றியோ: இம்முறை இடம்பெற்றுவரும் ஃபீஃபா உலகக் கிண்ணப் போட்டிகளில் மத்தியஸ்தரால் பயன்படுத்தப்படும் வெனிஷிங் ஸ்ப்ரே, கால்பந்தாட்ட வரலாற்றில் புதுமையானது. ‘ஃப்ரீ கிக்’கின்போது பந்தை வைக்க வேண்டிய இடத்தில் ஸ்ப்ரேயை உபயோகிக்கின்றனர். மேலும் பந்து மற்றும் அதை தடுத்து நிறுத்துபவர் இடையே சரியான தூரம் உள்ளதா என்பதை கணக்கிட்டு வெனிஷிங் ஸ்ப்ரேயை பயன்படுத்துகின்றனர்.
-
இங்கிலாந்தில் கொல்லப்பட்ட சவுதி மாணவி நினைவாக ‘ஸதகத்துல் ஜாரியா’ நிதியம் உதயம்
– MJ லண்டன்: கடந்த வாரம் இங்கிலாந்தில் குத்திக் கொல்லப்பட்ட சவுதி அரேபியாவின் 31 வயதுடைய நாஹிட் அல்மானியா எனும் எசக்ஸ் பல்கலைக்கழக மாணவியின் நினைவாக ‘சதகத்துல் ஜாரியா’ எனும் நிரந்தர கொடை நிதியத்தினை அவரது தோழிகள் ஆரம்பித்திருக்கின்றனர்.
-
முஸ்லிம் தலைவர்கள் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய சந்திப்பு
– SHM கொழும்பு: இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில், இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர்.