காத்தான்குடி: காத்தான்குடிபள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2014 சாதனையாளர் பாராட்டு விழா 21-06-2014 நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபையின் ஸ்தாபகத் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக காத்தான்குடி –பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி கலந்து கொண்டார்.
இதன் போது காத்தான்குடி வரலாற்றில் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,வழிகாட்டிய அதிபர்கள் ஆகியோர் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் விஷேடமாக கல்வித் துறையில் அதியுயர் சாதனை படைத்து காத்தான்குடி மண்ணுக்கு பெருமை தேடித்தந்தவர்கள் 6 ,பேரும் மூத்த சமூக சேவையாளர்கள் 3 பேருமாக ஓன்பது பேர் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு உலக ஆசிரியர் தினத்தில் ஜனாதிபதியினால் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த அதிபர்கள்,ஆசிரியர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும்,காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) , பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ், காத்தான்குடி –பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம்.றமீஸ் (ஜமாலி) உட்பட பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரமுகர்கள்,உலமாக்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த. (சா-த) பரீட்சையில் உயர் சித்திபெற்ற மாணவர்கள். பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் ,அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,வழிகாட்டிய அதிபர்கள், மூத்த சமூக சேவையாளர்கள் ,கல்விமான்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment