அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும் நாள் விரைவில்…

sampika_ranawaka-300x199[1]– A. அப்துல் ஹமீட்

கொழும்பு: இலங்கை வரலாற்றைப் புரட்டிப்பார்க்காமல், சில்லறைக் காசுகளுக்கும் சொத்துக்களுக்கும் ஆசைப்பட்டு, அரசியல் உயர்பீடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்கவுக்கு முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும் நாள் மிக தொலைவில் இல்லை!

தீவிரவாதத்தைத் தூண்டிவிட்டு, சட்டத்தைக் கையிலெடுத்து, அப்பாவி முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பேரினவாதக் காடைத்தனத்தைக் கண்டிக்க வக்கில்லாத இத்தகைய பேரினவாதிகள், ஏற்கனவே காயப்பட்டுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளில் தொடர்ந்தும் நெருப்பை வார்த்துவருகிறார்கள்.

இவர்களின் திட்டமிட்ட இக்கலவரங்களின் மூலமாக இலங்கை முஸ்லிம்கள், இவ்வரசாங்கத்தால் மறைக்கப்பட்டிருந்த பல விடயங்களை அறிந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் சமகால அரசியல் கொள்கை என்ன, போலி முஸ்லிம் அரசியல் நடிகர்கள் யாவர், அவர்களின் பின்னணிகள் என்ன என்பவைகளையும் திட்டமாக அறிந்துவைத்திருக்கின்றனர். இன்று அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட நிலையே, நாளை இன்னும் பல முஸ்லிம் அரசியல் நடிகர்களுக்கு நடக்கும். ஆயுதப் பாதுகபாப்புடன், குளிரூட்டப்பட்ட வாகனங்களில் வந்திறங்கும் இத்தகைய ஆசாமிகளின் சுயரூபத்தை பாதிக்கப்பட்டவர்கள் நன்கறிந்திருக்கின்றனர். 

இன்ஷாஅல்லாஹ் தேர்தல் ஒன்று வரும்போது, சம்பிக்க ரணவக்கவுக்கு மாத்திரமல்ல, பிரதேச போலி அரசியல் நடிகர்களுக்கும், இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு அப்பாவி முஸ்லிம்களைத் தாக்கி, அழித்துவரும் இந்த ஆளும் அரசாங்கத்தையும் ஆட்சியிலிருந்து கவிழ்த்து, பேரினவாதம் பேசும் அத்தனைபேருக்கும், அதற்கு துணைபோகும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் தகுந்த பாடத்தினை இந்த முஸ்லிம் சமூகம் மேற்கொள்ளும். 

beruwela

இன்றைய இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையை அரசாங்கக் கூட்டாளிகளை வைத்து உடைப்பதற்கு பல பிரயத்தனம் எடுத்தனர். எடுத்தும் வருகின்றனர்.

எத்தனை கடைகளை எரித்தாலும், உயிர்களை பிடிங்கினாலும் ஈமானின் உறுதியை இவர்களால் மதிப்பிடி முடியாது. அது முஸ்லிம்களுக்கான மானமும் மரியாதையுமாகும்.

எனவே, பொறுமை கொள்வோம். இறைவனிடம் பொறுப்பைக் கொடுப்போம். தொடர்ந்தும் பேரினவாதிகளால் நாமும், எமது சொத்துக்களும் தாக்கப்பட்டு, அழிக்கப்படுமிடத்து, எவ்வாறு இத்தகைய அநியாயங்களை உலகுக்குப் பறைசாற்றினோமோ, அதே பாதையில் பயணிப்போம். ஏனெனில் தற்போதைக்கு இது ஒன்றுதான் எமது வெற்றியும், அரசாங்கத்தின் பலவீனமுமாகும்.

aluthgam

களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காடையர் கும்பலின் தாக்குதல் நடந்து ஒருவாரமாகியும், இன்னும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சில முஸ்லிம் அரசியல் நடிகர்கள் இம்மக்களை மறந்து, அரசியல் சுகங்களில் லயித்திருக்கின்றனர்.

இவர்களின் செயற்பாடுகளை – பாதிக்கப்பட்ட மக்கள், ஏனைய இலங்கை முஸ்லிம்கள், புலம்பெயர் அமைப்புக்கள், வெளிநாட்டில் தொழிபுரியும் முஸ்லிம்கள், இலங்கை மற்றும் உலக ஊடகங்கள் அனைத்தும் தெட்டத்தெளிவாக அறிந்துவைத்துள்ளன.

காத்திருங்கள்….காலம் வரும்….முஸ்லிம்களின் ஒன்றுபட்ட வாக்கிற்கு..!!

dua

Published by

Leave a comment