இங்கிலாந்தில் கொல்லப்பட்ட சவூதி மாணவியின் ஜனாஸாவைப் பெற, பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் விமான நிலையத்தில்…
– MJ
அல்-ஜவ்ஃப்: கடந்த செவ்வாய்க்கிழமை, இங்கிலாந்தின் எசக்ஸ் பல்கலைக்கழக மாணவி நாஹிட்அல்மானியா எனும் 31 வயதுடைய சவுதிப்பிரஜை, கொல்செஸ்டர் எனும் இடத்தில் பலமாக குத்தப்பட்ட கொலைசெய்யப்பட்டார். அவரது ஜனாஸா நேற்று சனிக்கிழமை அல்-ஜவ்ஃப் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தது.
விமான நிலையத்தில் அன்னாரது அன்புப்பெற்றோர், உறவினர்கள், பொது அமைப்புக்களின் உறவினர்கள் மற்றும் அல்-ஜவ்ஃப் நகரின் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அனைவரது உள்ளங்களிலும் ஏற்பட்ட சோகத்தால் அனைவரது கண்களும் நணைந்திருந்தன.
சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற குறித்த மாணவி, அதே பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று, இங்கிலாந்தின் எசக்ஸ் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியிருந்தார்.
ஆங்கில வகுப்புக்குச் செல்லும்போது, ஓர் சன நெருக்கடியான நகர் ஒன்றில் வைத்தே நாஹிட் அல்மானியா 16 தடவைகள் குத்தித்தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஓர் அதிர்ச்சியை அளிப்பதாக சவுதி அரேபியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்ட மாணவியின் உறவுகள் சோகத்தில்…
முகமூடியணிந்து, உடலை முழுவதும் மறைத்து சென்ற மாணவின் உடையால் தான் ஆத்திரமடைந்ததாக, 52 வயதான கொலையாளி பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்நகரில் இன்னும் சவுதி மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய இராச்சியத்துக்கான சவுதி தூதுவர் இளவரசர் முகம்மட் பின் நவாப் பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டிருக்கின்றார்.
கொல்லப்பட்ட மாணவியின் ஜனாஸா அல்-ஜவ்ஃப் காதிம் அல் ஹரமைன் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அல்-லாகுயிட் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாணவி கொல்லப்பட்ட இடத்தில் பொலிஸார் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
Leave a comment