கொழும்பு: இன்று முஸ்லிம் என்ற காரணத்தால், முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையமான நோலிமிட், பானந்துறையில் எரிக்கப்பட்டு சாம்பலாகி இருக்கின்றது. இக்காலம் இலங்கை முஸ்லிம்கள் உரிமைகளுக்கான அச்சுறுத்தலின் உச்சகட்டமென உலக ஊடகங்கள் எச்சரித்திருக்கும் நிலையில்,
முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றி எரியும் சமகாலப் பிரச்சினையில் ஏதோ ஒருவகையில் தங்களை அர்ப்பணித்திருக்கும் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் ஆகியோரைத் தவிர வேறு எவருக்கும் அக்கறையில்லாமல் போய்விட்டது.
இது அரசாங்கத்தின் முழு விளையாட்டே என்று தெரிந்ததால்தான், தனது சமூகம் மண்ணறை சென்றாலும், தான் மட்டும் பாராளுமன்ற ஆசனங்களில் அமரவேண்டும் என்ற நப்பாசையில் இன்னும் எமது நயவஞ்சக முஸ்லிம் பெயர்தாங்கி அமைச்சர்கள் இருப்பது வேதனையளிக்கின்றது.
அவர்களுள், கொழும்பில் அமைச்சர் பௌசி, அமைச்சர் அலவி, கம்பளை காதர், புத்தளத்தில் ஏ.எச்.எம் அஸ்வர், காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அக்கரைப்பற்றில் பிரதியமைச்சர் அதாவுல்லாஹ், ஏராவூரில் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்-மஜீத்.
இலங்கை முஸ்லிம்களின் உடமைகள் மட்டுமல்ல உணர்வுகளும் எரிகின்றன. தயவு செய்து இத்தருணத்தில் உங்களது நரித்தந்திரங்களை இச்சமூகத்துக்கு காட்டிக்கொடுக்காதீர்கள். முஸ்லிம் என்றும், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தரவேண்டும் என்றே உங்களை நாங்கள் பாராளுமன்றம் அனுப்பிவைத்தோம்.
உங்களின் இவ்விளையாட்டுக்கள் எக்காலத்துக்கும் பொருந்தாது. அல்லாஹ் உங்களைவிட சக்தியானவன். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள்.
முஸ்லிம்களின் உடமைகளும், உணர்வுகளும் பேரினவாதிகளால் எரிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் இத்தகைய அமைச்சர்கள் தங்களது ஊர்களில் சில நிகழ்ச்சிகளை நடாத்தி, முஸ்லிம்களை திசைதிருப்பி வருகின்றனர்.
இது அரசாங்கத்தை சந்தோசப்படுத்த எடுக்கப்படும் ஒரு சமூக துரோக-விரோத முயற்சியாகும்.
மக்கள் அவதானமாக இருங்கள். எமது சமூகத்தின் உரிமைகள் எரிக்கப்படும்போது இன்னும் இவர்கள் மௌனமாக இருந்து இத்தகைய விளையாட்டுக்களை மேற்கொண்டால், தயவுசெய்து இவற்றைப் பகிஷ்கரிங்கள்.
இவர்களின் மௌனவிரோதம் இன்னும் இலங்கை மண்ணில் முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும் சூரையாடப்பட இருக்கின்றன என்பதற்காக அடையாளமாக அமைகின்றன.
இதனால்தான் அவர்கள் தொடர்வார்கள்…இன்னும் எரிப்பார்கள்
Published by

Leave a comment