மட்டக்களப்பு: மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் 21-06-2014 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.
‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ உயிரைக் காக்க இரத்த தானம் செய்யும் உங்களை அன்போடு அழைக்கின்றோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் இரத்த தான முகாமில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் ,பொதுமக்கள்,இளைஞர்,யுவதிகள்,ஊடகவியலாளர்கள் ஆகியோர் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
இரத்த தானம் வழங்குவோரின் உடல் நிலையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேக் பரிசோதித்தார்.
இதில் 130க்கு மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் தங்ளது இரத்தத்தை தானமாக வழங்கியதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேக் தெரிவித்தார்.
இவ் மாபெரும் இரத்ததான முகாமிற்கு அணுசரணையை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 2005ம் ஆண்டு க.பொ.த உயர்தர மாணவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment