கெய்ரோ: எகிப்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உட்பட 180 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.எகிப்தில் மோர்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
இதனைக் கண்டித்து மோர்சியின் ஆதரவாளர்களான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் கிளர்ச்சியில் குதித்தனர்.
இதை ஒடுக்க ராணுவம் இறக்கப்பட்டது. இந்த ராணுவ ஒடுக்குமுறையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது தேசத் துரோக குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்குகளில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 683 பேருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தது.இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடும் செய்யப்பட்டது.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் உட்பட 180 பேரின் தூக்கை உறுதி செய்துள்ளது.
Published by

Leave a comment