உலகக் கிண்ணம்-2014: போட்டிகளில் பயன்படுத்தும் ‘வெனிஷிங் ஸ்ப்ரே’ …

ball spray– MJ

றியோ: இம்முறை இடம்பெற்றுவரும் ஃபீஃபா உலகக் கிண்ணப் போட்டிகளில் மத்தியஸ்தரால் பயன்படுத்தப்படும் வெனிஷிங் ஸ்ப்ரே, கால்பந்தாட்ட வரலாற்றில் புதுமையானது. ‘ஃப்ரீ கிக்’கின்போது பந்தை வைக்க வேண்டிய இடத்தில் ஸ்ப்ரேயை உபயோகிக்கின்றனர். மேலும் பந்து மற்றும் அதை தடுத்து நிறுத்துபவர் இடையே சரியான தூரம் உள்ளதா என்பதை கணக்கிட்டு வெனிஷிங் ஸ்ப்ரேயை பயன்படுத்துகின்றனர்.

இந்த ஸ்ப்ரே பந்தின் உதை எல்லையையும், வீரர்களின் 10 யார்ட்ஸ் தடுப்பு எல்லையையும் நிர்ணயிக்கப் பயன்படுவதால், மத்தியஸ்தர் கண்சிமிட்டும் நேரத்தில் வீரர்கள் பிழையான வழிகளைக் கையாள்வது தடுக்கப்படுகிறது.

ஸ்ப்ரே அடித்த இடத்தில் ஒரு வெள்ளை கோடு தெரிகிறது. அந்த கோடு சிறிது நேரத்தில் தானாக மறைந்துவிடுகிறது.இந்த ஸ்ப்ரேயை ஜப்பானைச் சேர்ந்த நடுவரான யூய்ச்சி நிஷிமுரா தான் உலகக் கோப்பை போட்டியில் முதன்முதலாக பயன்படுத்தியுள்ளார். உலகக் கோப்பை 2014 போட்டிகளின் துவக்கமாக பிரேசில் மற்றும் குரோஷியா இடையே நடந்த போட்டியில் தான் இந்த வெனிஷிங் ஸ்ப்ரே முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

football

வெனிஷிங் ஸ்ப்ரேயை 915 பெயர் பிளே என்று உலகக் கிண்ணப்போட்டியில் அழைக்கின்றனர். இந்த ஸ்ப்ரேயை கண்டுபிடித்தவர் ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், தொழில் அதிபருான பப்லோ சில்வா என்பவர்.

14-vanishingspray-600[1]

எனினும், தென்அமெரிக்க கண்டங்களின் உள்ளுர் போட்டிகளில் கடந்த வருடம் இந்த ஸ்ப்ரே பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ball spray

Published by

Leave a comment