கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
தோஹா: புனித ரமழானை முன்னிட்டு கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (SLDC) ஏற்பாட்டில் பல மார்க்க சொற்பொழிவுகள் பிரபலமிக்க உலமாக்களால் நிகழ்த்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் உப செயலாளர் மௌலவி ஏ.சீ.என்.முஹம்மத் (அப்பாஸி) தெரிவித்தார்.
இதற்கமைவாக எதிர்வரும் 25ம் திகதி முதல் 30ம் திகதி வரை தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரியின் மார்க்க சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.
புதன் இரவு 8.30 மணி முதல் 9.30வரை கத்தார் ஸனாஇய்யா பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையத்திலும் வியாழன் இரவு 8.45 மணி முதல் 10.00மணி வரை அல்மனா டவருக்குப் பின்னால் அமையப் பெற்றுள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபிலும் 27ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையைத் தொடர்ந்து மதீனா கலீபா அஸ்ஸமாலிய்யா (பழைய முறூறுக்கு அருகாமையில்) பள்ளியில் ‘ரமளானை வரவேற்போம்;’ எனும் தலைப்பிலும் அதேதினம் மாலை 5.00மணி முதல் இரவு 8.00மணிவரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் பின் ஸைத் அரங்கிலும் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (SLDC) உப செயலாளர் மௌலவி ஏ.சீ.என். முஹம்மத் (அப்பாஸி) மேலும் தெரிவித்தார்.
அத்துடன் 28ம் திகதி முதல் 30ம் திகதி வரை தினமும் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து பல சுவாரஷ்யமான தலைப்புக்களில் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் பயான் நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரமளான் முழுவதும் குறித்த மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் இரவு நேர தராவீஹ் தொழுகைகள் ஆண்கள்இபெண்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் விசேட தலைப்புக்களில் பயான் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதால் கத்தார் வாழ் தமிழ் பேசும் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் (SLDC) கேட்டுக்கொண்டுள்ளது.
தொழில் நிமித்தம் கத்தாரில் வாழும் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு தாய் மொழியில் மார்க்க விடயங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையம் (SLDC) பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment