காங்கேயனோடை: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் 2014ம் ஆண்டுக்கான வருடாந்த பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 23-06-2014 நேற்று திங்கட்கிழமை மாலை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் தலைவர் எம்.சி.ஏ.கையும் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டார்.
இதன் போது காங்கேயனோடை பிரதேச கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்த சாதணையாளர்கள்,அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,முஅல்லிம்கள் ஆகியோர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதேச செயலாளர் வாசுதேவன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,அதிதிகள் ஆகியோரினால் பதக்கம்,விருது,பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு அல் -குர் ஆன் அபிவிருத்தி சபை பரீட்சை, 2013 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவ மாணவிகள், காங்கேயனோடை பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஆண் ,பெண் மாணவர்கள்,பள்ளிவாயல் பேஷ் இமாம்,முஅல்லிம்கள், புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் காங்கேயனோடை பிரதேச அபிவிருத்தி சபை தலைவர் ஏ.எல்.எம்.முஜாஹித், காங்கேயனோடை பிரதேச கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கன்,புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by



Leave a comment