இங்கிலாந்தில் கொல்லப்பட்ட சவுதி மாணவி நினைவாக ‘ஸதகத்துல் ஜாரியா’ நிதியம் உதயம்

remember– MJ

லண்டன்: கடந்த வாரம் இங்கிலாந்தில் குத்திக் கொல்லப்பட்ட சவுதி அரேபியாவின் 31 வயதுடைய நாஹிட் அல்மானியா எனும் எசக்ஸ் பல்கலைக்கழக மாணவியின் நினைவாக ‘சதகத்துல் ஜாரியா’ எனும் நிரந்தர கொடை நிதியத்தினை அவரது தோழிகள் ஆரம்பித்திருக்கின்றனர்.

‘நாஹிட் அல்மானியாவின் நினைவாக..’ என தலைப்பிடப்பட்ட இந்நிதியத்திற்கு, நன்கொடை வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள், 10 பவுண்ஸ், குறுந்தகவல் மூலமாக அனுப்பிவைக்க முடியும் என இந்நிதியம் கோரியுள்ளது.

கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் இன்றுவரைக்கும் 1,331.28 பவுண்ஸ் நன்கொடையாக மாணவர்களும், பொதுமக்களும் வழங்கி இருக்கின்றனர். இத்தொகை மென்மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nahid almania

இந்நிதி, அடிப்படை நீர் வசதியற்ற நாடுகளுக்கு நீர்ப்பம்பிகள் அமைத்து, உன்னதமான ஸதகதுல் ஜாரியாவை, மறைந்த நாஹிட் அல்மானியாவுக்காக உலகில் அமைத்துக்கொடுத்து, அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர் சுவர்க்கத்தைப் பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவரது உற்ற தோழிகள் தெரிவித்துள்ளனர்.

01-01-1984ம் ஆண்டு பிறந்த நாஹிட் அல்மானியா 30 வயதைக் கடந்த நிலையில், உடல் முழுவதையும் மறைத்துச் சென்றமைக்காக 16 தடவைகள் பலமாக குத்தப்பட்டு, இங்கிலாந்தில் கொல்செஸ்டர் எனும் இடத்தில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment