குருட்டு தேவதையின் இருட்டு நியாயங்கள்

goat hunting– பிரகாசக்கவி

முதலை விழுங்கிய

ஆடு ஒன்றின்

பிழுக்கை கிளறி

பகுப்பாய்வு நடக்கிறது

விழுங்கப்பட்டது

தெருநாயாகவோ
பாயும் புலியாகவோ

அல்லது
ஓடும் எலியாகவோ
இருக்கக்கூடும் என்னும்
ஊக மூட்டைகளும்

கிலோ கணக்கில்
அவிழ்த்து விடப்படுகிறது

நிறம்
இனம்
மதம் என்று
பற் பல தகவல்களும்

ஆட்டை இழந்தவன்
வாக்குமூலமாய்
பதியவும் படுகிறது

இறுதியாய்

தாகமெடுத்த
ஆடு குடித்து

குளம் வற்றி
முதலை

மூச்சு திணறி இறந்ததாய்
தீர்ப்பெழுதி

இடையன் கையில்
விலங்கும் மாட்டப்படுகிறது.

goat hunting

Published by

2 responses to “குருட்டு தேவதையின் இருட்டு நியாயங்கள்”

  1. ஒரு துளி ரத்தத்தில் பல லட்சம் அணுக்கள் அடங்கிருப்பது போல் — இந்த கவி வரிகளுக்குள் அனேக அர்த்தங்கள் அடங்கிக் கிடக்கிறது . அப்பாவி ஆடுகளை பேரின முதலைகள் குதரிக்கொண்டிருந்த போது குள்ள நரிக் கூட்டம் ஒன்று வேடிக்கை பார்த்து நின்றது —

    1. பிரகாசக்கவி அன்வர் Avatar
      பிரகாசக்கவி அன்வர்

      நன்றி சகோதரரே உங்கள் கருத்துக்கு

      -பிரகாசக்கவி-

Leave a comment