Category: Your Kattankudy
-
‘நெதர்லாந்து உலகக் கிண்ணத்தை வென்றால் அனைத்து வீரர்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம்’
– SHM ரியோடி ஜெனீரோ: நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் உலகக் கோப்பையை வென்றால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது.3 முறை இறுதிப் போட்டி வரை வந்து 2வது இடத்தைப் பிடித்த அணி நெதர்லாந்து.
-
புதிய இஸ்லாமிய தேசத்தில் முஸ்லிம்கள் குடியேற ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி அழைப்பு!!
– S-90 மொசூல்: சிரியா- ஈராக் நகரங்களை இணைத்து தாங்கள் உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேற வேண்டும் என்று அதன் கலீபாவாகிய அபுபக்ர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது.
-
இத்தாலியில் பொதுபலசேனாவை விமர்சித்தமைக்காக விமல் வீரவன்ச தாக்கப்பட்டார்!
– SHM ரோம்: இத்தாலியில் பொது பலசேனாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச மீது அக்கட்சியினர் தாக்குல் நடத்தியுள்ளனர்.இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அமைச்சரான விமல் வீரவன்ச இத்தாலி சென்றுள்ளார்.
-
பர்மாவில் மீண்டும் முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தாக்குதல்
பர்மா: மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளும், ஒரு பள்ளிவாயலும் பௌத்தர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 500க்கும் மேற்பட்ட பௌத்தர்கள், மூங்கில் கட்டைகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் தாக்க முயன்றதை பொலிசார் தடுத்தனர்.
-
ஜமாஅத் இஸ்லாமியின் இப்தார் நிகழ்வு
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத் இஸ்லாமி காத்தான்குடி பிரிவின் SFRD (Social For Rural Development) ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (றமழான் 3) இரண்டாவது நாளாகவும் காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள கடற்கரை பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
ட்விட்டரை வாங்க பேஸ்புக் முயற்சி..!
நியுயோர்க்: குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
-
அளுத்கமை, பேருவளை கலவரம்: ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலவரையறை முடிவு!
கொழும்பு: அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டு ள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலு வலகம் தெரிவித்தது.
-
இலங்கையில் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது
கொழும்பு: இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. குறிப்பாக 22 முதல் 30 வயதிலான இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
-
சவுதி கொடைவள்ளல்களால் ரமழானில் 7.5 மில்லியன் இப்தார் உணவுப் பொதிகள் மஸ்ஜிதுல் ஹரம் ஆலயத்துக்கு அன்பளிப்பு!
– MJ மக்கா: புனித ரமழானை முன்னிட்டு, புனிய ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலுக்கு வரும் மக்களுக்காக, சவுதி அரேபியாவின் கொடைவள்ளல்களால் 7.5 மில்லியன் இப்தார் உணவுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.
-
பிஸ்மி குழுமத்தின் புதிய வளாக திறப்பு விழாவும், இப்தார் நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி குழுமத்தின் தலைமையகம் மற்றும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை என்பவற்றின் புதிய வளாக திறப்பு விழாவும் ,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் 01-07-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி -6 பிரதான வீதி அலியால் ஹாஜியார் ஒழுங்கையிலுள்ள பிஸ்மி தலைமையகத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரிவிலுள்ள 57 பள்ளிவாயல்களுக்கு பேரீத்தம்பழங்கள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புத்த சாசன மத விவகார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் றமழான் மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரிவிலுள்ள பள்ளிவாயல்களுக்கு
-
ஆர்ஜன்டீனா இறுதி நேர அசத்தல்: நுழைந்தது காலிறுதிக்கு!
– MJ சா போலோ: தற்பொழுது நிறைவடைந்த இரண்டாம் சுற்றின் 7வது போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இறுதிவரை மிக விறுவிறுப்பாகச் சென்ற போட்டியில், மேலதிக நேரத்தின் இரண்டாம் பகுதியில் ஆர்ஜன்டீனா வீரர் டீ மரியோ அடித்த அசத்தலான கோலில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.