சவுதி கொடைவள்ளல்களால் ரமழானில் 7.5 மில்லியன் இப்தார் உணவுப் பொதிகள் மஸ்ஜிதுல் ஹரம் ஆலயத்துக்கு அன்பளிப்பு!

ifthar makka– MJ

மக்கா: புனித ரமழானை முன்னிட்டு, புனிய ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலுக்கு வரும் மக்களுக்காக, சவுதி அரேபியாவின் கொடைவள்ளல்களால் 7.5 மில்லியன் இப்தார் உணவுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.

பிரதி வருடமும் ரமழானில் புனிய ஆலயங்களான மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி உட்பட சவுதியிலுள்ள பெரும்பாலான பள்ளிவாயல்களில் இப்தார் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

அவற்றிலும், இரு புனித ஆலயங்களுக்கு வரும் நோன்பாளிகளை உபசரிக்க, அரபிகள் போட்டி போட்டுக்கொண்டு முன்வருவார்கள்.
இவ்வாறான ரமழான் நன்கொடைகளை வழங்குவதில் அரபிகளுக்கு அரபிகளே நிகர்.

‘தினமும் 250,000 உணவுப் பொதிகள் மஸ்ஜிதுல் ஹரமில் பொதுமக்களுக்காக வழங்கப்படுகின்றன. இவற்றுள் 80,000 பக்கற்றுகள் வடக்கு நுழைவாயில் வழியாகவும், 70,000 பக்கற்றுகள் தெற்கு நுழைவாயில் வழியாகவும் வழங்கப்படுகின்றன. மேலும், 90,000-120,000 வரையான உணவுப் பொதிகள் அஸ்ஸா மற்றும் ஸாமியா நுழைவாயில்கள் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன’ என்பதாக இப்தார் விடயங்களுக்குப் பொருப்பான மக்கா தஃவா நிலைய பொறுப்திகாரி அப்துல்லாஹ் அல் நாஃபி தெரிவிக்கிறார்.

இவ் ஏற்பாடுகளுக்காக 120 பனியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பனிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அருள் பொங்கும் ரமழானில், அல்லாஹ்வின் புனிதஸ்தலங்களைக் காண கண்கோடி வேண்டும்!

ifthar makka

Published by

Leave a comment