இத்தாலியில் பொதுபலசேனாவை விமர்சித்தமைக்காக விமல் வீரவன்ச தாக்கப்பட்டார்!

wimal– SHM

ரோம்: இத்தாலியில் பொது பலசேனாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச மீது அக்கட்சியினர் தாக்குல் நடத்தியுள்ளனர்.இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அமைச்சரான விமல் வீரவன்ச இத்தாலி சென்றுள்ளார்.

அதன்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீரவன்ச அங்கு நிகழ்த்திய உரையில் புத்த துறவிகளின் அமைப்பான பொது பலசேனாவைப் பற்றி மிகக் கடுமையாக விமர்ச்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், விமலின் பேச்சை எதிர்க்கும் வகையில் அவரது சட்டையை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தகவலை உறுதி செய்த பொது பலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ, தாக்குதல் நடத்தியவர்கள் பொதுபல சேனாவைப் பற்றி இங்கு பேசக் கூடாது என அமைச்சரிடம் தெரிவித்தாகவும், அப்போது, அமைச்சரின் பாதுகாவலர்கள் விமல் வீரவன்சவை பாதுகாத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment