ரியோடி ஜெனீரோ: நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் உலகக் கோப்பையை வென்றால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது.3 முறை இறுதிப் போட்டி வரை வந்து 2வது இடத்தைப் பிடித்த அணி நெதர்லாந்து.
கோப்பைக் கனவு இதுவரை அதற்குக் கை கூடவில்லை.இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்கமல் கம்பீரமாக காலிறுதிக்குள் வந்துள்ளது டச்சுலாந்து.
காலிறுதிப் போட்டியில் கொஸ்டாரிகாவைச் சந்திக்கவுள்ளது நெதர்லாந்து. இப்போட்டியில் வென்று அரை இறுதிக்குள் அது நிச்சயம் நுழையும் என்று நெதர்லாந்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ருயிம்டெவார்ட்பெட்ரிஜ் என்ற ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒரு பரிசை அறிவித்துள்ளது. அதாவது நெதர்லாந்து அணி கோப்பையை வென்று சம்பியன் ஆனால் விண்வெளிப் பயணத்தை அது பரிசாக அறிவித்துள்ளது.
நெதர்லாந்து அணியில் இடம் பெற்றுள்ள 23 பேரையும் இலவசமாக விண்வெளிக்குக் கூட்டிச் செல்வதாக அது கூறியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் மிச்சில் மோல் கூறுகையில் நெதர்லாந்து அணி அபாரமான அணி. எனவே அதற்கு அபாரமான பரிசாக இந்த விண்வெளிப் பயணத்தை அறிவிக்கிறோம் என்றார்.
Published by


Leave a comment