பிஸ்மி குழுமத்தின் புதிய வளாக திறப்பு விழாவும், இப்தார் நிகழ்வும்

bismi ifthar– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகரில் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி குழுமத்தின் தலைமையகம் மற்றும் பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை என்பவற்றின் புதிய வளாக திறப்பு விழாவும் ,இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் 01-07-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி -6 பிரதான வீதி அலியால் ஹாஜியார் ஒழுங்கையிலுள்ள பிஸ்மி தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிஸ்மி இஸ்லாமிய மேம்பாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் எஸ்.நுஸைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி கலந்து கொண்டு சிறப்புரையாட்டினார்.

இதன் போது விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி), ஏ.ஜி.எம். பிரதர்ஸ்  உரிமையாளர் ஏ.ஜே.எம்.ஹாரூன், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் ,பெற்றோர்கள் ,பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் உட்பட உறுப்பினர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment