Category: Your Kattankudy
-
‘அல் குர்ஆனும் நாமும்’ விஷேட பயான் (ஓடியோ)
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் தலைப்பு- அல் குர்ஆனும் நாமும் உரை-அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் (மதனி) இடம்-பாலமுனை மஸ்ஜிதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயல். காலம்.30-06-2014 –றமழான் இரவு நேர தொழுகையைத் தொடர்ந்து.
-
‘இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐநா விசாரணை நடக்கும்’
லண்டன்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள ஐநா விசாரணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜெஹாங்கிர் தெரிவித்துள்ளார்.
-
நோன்புக் கஞ்சி இல்லாமலும், பெண்களுக்கான தொழுகை வசதிகள் இல்லாமலும் பரிதவிக்கிறது சுஹதா பள்ளிவாயல்!
சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனம் செலுத்தவும் – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி, பொதுமைதான சதுக்கத்தில் அமைந்திருக்கும் சுஹதாப் பள்ளிவாயல் 1990, காத்தான்குடி மக்களின் உயிரிழப்புக்களை ஞாபகப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி மஹல்லாவில் வறுமைக் கோட்டுக் கீழ் வாழும் பல குடும்பங்களும், சாதாரண வருமானங்களைப் பெறும் மக்களுமே வாழ்ந்து வருகின்றனர்.
-
‘அல்பக்தாதியே இஸ்லாமிய தலைவர்! ஏனைய வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல்’ – இசிஸ் மிரட்டல்
– SHM மொசூல்: கிறித்துவர்களுக்கு எப்படி போப் தலைவரோ அதேபோல் இஸ்லாமியர்களுக்கு அல் பக்தாதிதான் தலைவர் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். (இசிஸ்) அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. அத்துடன் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.
-
சவுதி அரேபியாவின் வடக்கு எல்லை தீவிர பாதுகாப்பில்..
– MJ றியாத்: தற்பொழுது ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியும், ‘ஹலீபத்’ பிரகடனமும் அரபு நாடுகளை அச்சமடையச் செய்திருக்கின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ‘இஸிஸ்’ அமைப்பு விவகாரத்தில் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
-
புதிய ‘ஹலிஃபாத்’ உருவாகியதாக ஐஸிஸ் அறிவிப்பு
– SHM பக்தாத்: ஈராக்கிலும், சிரியாவிலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை இணைத்து, புதிய இஸ்லாமிய அரசு ( ஹலிஃபாத்) ஒன்றை உருவாக்கியிருப்பதாக, ஐஸிஸ் அறிவித்திருக்கிறது. இந்த புதிய அரசின் ஹலீஃபா ஆகவும், உலகின் அனைத்து முஸ்லீம்களின் தலைவராகவும், தனது தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி இருப்பார் என்று அது அறிவித்திருக்கிறது.
-
குவைத்தில் இவ்வருடமும் வழமைபோல் மாபெரும் இப்தார் ஏற்பாடுகள்
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC) கடந்த வருடம் (2013) புனித ரமழான் மாதம் முழுவதும் குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆப் பேருரை நிகழ்த்தப்படும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் நடத்தியது அனைவரும் அறிந்த செய்தி.
-
‘அனைத்து சவுதி மக்களும் சவுதி அரேபியாவைக் காக்க முன்வர வேண்டும்’
அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் முப்தி வேண்டுகோள்! – MJ றியாத்: ‘சவுதி மக்கள் அனைவரும் சவுதி அரேபியாவை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தியான அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் அவரச வேண்டுகோளை சவுதி மக்களுக்கு விடுத்துள்ளார்.
-
‘துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கத்திக்குத்தில் பலியானதாக சான்றிதழ்’
கொழும்பு: இலங்கையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை தேவை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்துள்ளது.
-
புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்
கொழும்பு: அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையப் பணிப்பாளரும், பாதுகாப்பு பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கேட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பைக் கருதி இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானில் ஓடிப் போய் திருமணம் செய்த ஜோடி தலை துண்டித்து கொலை!
– SHM லாகூர்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பெண் வீட்டாரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் முவாபியா பீபி(23). அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த சாஜத் அகமதை(27) காதலித்துள்ளார்.
-
ரமழான் வரவேற்பு அலங்காரங்கள்-படத்தொகுப்பு
சங்கைமிக்க ரமழானை வரவேற்பதில் உலகிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் எத்தனை ஆர்வம்.