காத்தான்குடி: புத்த சாசன மத விவகார அமைச்சின் கீழ் இயங்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் றமழான் மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரிவிலுள்ள பள்ளிவாயல்களுக்கு
வழங்குவதற்காக வழங்கிவைக்கப்பட்ட பேரீத்தம்பழங்களை பள்ளிவாயல்களுக்கு கையளிக்கும் நிகழ்வு 01-07-2014 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் கலந்து கொண்டார்.
இதன் போது சம்மேளனத்தின் தலைவர் சுபைர் உள்ளிட்ட சம்மேளன பிரதிநிதிகளால் பள்ளிவாயல்களுக்கு வழங்குவதற்காக வழங்கிவைக்கப்பட்ட பேரீத்தம்பழங்கள் பள்ளிவாயல்களின் நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு வழங்கி வைக்கப்பட்ட 8 எட்டு கிலோ எடையுள்ள 702 பெட்டி பேரீத்தம்பழங்களில் 5616 கிலோ பேரீத்தம்பழங்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரிவிலுள்ள 57 பள்ளிவாயல்களுக்கு வழங்கப்பட்டு அப் பள்ளிவாயல் மஹல்லாவிலுள்ள 17.444 குடும்பங்களுக்கு 320 கிராம் வீதம் பகிர்தளிக்கப்படவுள்ளதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தெரிவித்தார்.
Published by



Leave a comment