139 மில்லியன் ரூபா வருமானவரி நிலுவையில்!!

tax-on-sri-lanka-vehicles[1]கொழும்பு: நாற்பதாயிரத்துக்கும் அதிகமான தனியார் நிறுவனங்களும் தனி நபர்களும் சுமார் 139 பில்லியன் ரூபா வருமான வரி செலுத்தவில்லையென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமான வரிகளைச் செலுத்தத் தவறுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் பி.எல்.எஸ்.லியனகே தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தால் கடந்த மாதகாலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.1406 தனியார் கம்பனிகள் வருமான வரிக்கான கோப்புக்களை ஆரம்பித்துள்ள போதும் அவை வருமான வரி செலுத்தவில்லை. தமது நிறுவனங்கள் நஷ்டம் அடைந்திருப்பதாக அவ்வாறான நிறுவனங்களால் கூறப்படுகின்றபோதும் அவை இலாபம் ஈட்டுவதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டி ருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்களில் உணவகங்கள், ஹோட்டல்கள், மென்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதி யாளர்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறானவற்றில் பல நிறுவனங்கள் கடந்த 3 வருட நிலுவையைச் செலுத்த வேண்டியதாகவும் காணப்படுகின்றன.

இதனைவிட 2972 தனிநபர்கள் வருமான வரி செலுத்தத் தவறியி ருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் பி.எல்.எஸ்.லியனகே, இவர்களுக்கு எதிராக எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப் பட்டிருப்பதாகவும் வருமானவரியைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

300 நிறுவனங்கள் தமக்கான பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தத் தவறியுள்ளதாகவும், வரி மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கு பல்வேறு செயற்றிட்டங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment