லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யாவின் இப்தார் நிகழ்வு

???????????????????????????????– எம்.எச்.எம்.அன்வர்

காத்தன்குடி: புதிய காத்தன்குடி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் இயங்கிவரும் ‘லஜ்னத்துஸ்ஸூன்னா அந்நபவிய்யா’ பெண்கள் அரபிக்கல்லூரியின் ஏற்பாட்டில்  இப்தார் நிகழ்வு நேற்று அதன் வளாகத்தில் இடம்பெற்றது. பயான் நிகழ்வு அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சி.எம். ஜெய்னுலாப்தீன் (மதனி) யினால் நிகழ்த்தப்பட்டதுடன் அரபிக்கல்லூரி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

லஜ்னத்துஸ் ஸூன்னா அன்னபவிய்யாவின் கீழ் இயங்கும் மஃஜதுஸ் ஸூன்னா பெண்கள் அரபிக்கல்லூரியானது 2009 ம் ஆண்டு அப்பகுதியிலுள்ள பெண் மாணவிகளின் நலனை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டு நிரந்தர கட்டடம் இன்றி தற்காலிக கொட்டில்களில் இயங்கிவருகின்றது இங்கே இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் கிதாபு பிரிவில் சுமார் 140 மாணவிகள் கற்கின்றனர்

???????????????????????????????

அத்துடன் தஃவா, சமூக சேவை மற்றும் கல்விச்சேவை போன்ற பணிகளிலும் இக்கல்லூரி நிருவாகம் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளதுடன் இதன் பணிப்பாளராக அஷ்ஷெய்ஹ் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி) யும் அதிபராக அஷ்ஷெய்ஹ் எம்ஏசிஎம் ஜெய்னுலாப்தீன் (மதனி) யும் கடமையாற்றுகின்றனர்.

???????????????????????????????

இதற்கான நிரந்தர கட்டடம் அமைத்தல் மற்றும் கனணி போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டிய தேவையிருப்பதாக பிரிவிற்குப்பொறுப்பான விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம்.ஜிப்ரி (மதனி) தெரிவித்தார்.

???????????????????????????????

Published by

Leave a comment