லண்டன்: தற்பொழுது உலகெங்கிலிலும் பேசப்பட்டுவரும் பெயர்கள் இரண்டு. ஒன்று இஸிஸ் என்ற போராட்ட அமைப்பு. மற்றையது அதன் தலைவர் அல்லது ஹலீபா என அழைக்கப்படும் அபுபக்ர் அல் பக்தாதி ஆகும்.
உமர் முக்தார், கேர்ணல் கடாபி, சதாம் ஹூஸைன், ஒஸாமா பின்லாடன் ஆகியோருக்குப் பின்னர் சமகாலத்தில் பேசப்படுபவர்தான் அபூபக்ர் அல் பக்தாதி. வயது 42 அல்லது 43.
1971ம் ஆண்டு, ஈராக்கின் ஸமர்ரா எனும் ஊரில் பிறந்த அபூபக்ர் அல் பக்தாதி, பக்தாத் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கற்கை நெறியில் கற்று, இஸ்லாமிய தத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.
இதன் பின்னர், அமெரிக்கா இராணுவத்தினர் ஈராக்கை கைப்பற்றும்வரை உள்ளுர் இமாமாக செயற்பட்டார். இதன்படி, முஜாஹிதீன் மஜ்லிஸ் சூறாசபை, , இஸ்லாமிய ஈராக் மாநில அமைப்பு (Islamic State of Iraq – ISI) ஆகிய அமைப்புக்களில் இமாமாச் செயற்பட்டார். இதன் பின்னர் அல்கைதா அமைப்புடன் இணைந்து சிரேஷ்ட உறுப்பினராகச் செயற்பட்டார்.
16-05-2005 இல் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக இருந்த அபூ ஒமர் அல் பக்தாதி, அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டதன் பின்னர் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக பக்தாதி நியமிக்கப்பட்டார்.
2010 மற்றும் 2011 காலப்பகுதியில் ஈராக்கில் அமெரிக்காவுக்கு எதிரா இடம்பெற்ற பாரிய தாக்குதல்களை பக்தாதி வழிநடாத்தினார். 28-08-2011 பக்தாதில் உள்ள ‘உம் அல் குரா’ பள்ளிவாயல் குண்டு வெடிப்பு, பக்தாத் நகர் கார் குண்டுவெடிப்புக்களுக்கு தலைமை தாங்கி வழி நடாத்தினார்.
02-05-2011இல் அமெரிக்காவின் விசேட படையினரால் கொல்லப்பட்ட அல்கைதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின்லாடனின் கொலைக்குப்பின்னர், அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என தீர்மானித்து, 05-05-2011 இல் ஈராக்கின் ‘ஹில்லா’ நகரில் பாரிய தாக்குதலை வழிநடாத்தினார். இத்தாக்குதலில் 24 பொலிஸார் கொல்லப்பட்டிருந்ததுடன், 72 பேர் காயமடைந்திருந்தனர்.
இதன் பின்னர் 22-12-2011 இல் பக்தாதில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்பில் 63 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 180 பொதுமக்கள் படுகாயமடைந்திருந்தனர். இந்த பாரிய குண்டு வெடிப்புக்கும் பக்தாதி பொறுப்பேற்றிருந்தார்.
02-12-2012 இல் பக்தாதைத் கைப்பற்ற பாரிய ‘ஒபரேசன்’ ஒன்றை ஐ.எஸ்.ஐ. அமைப்பு பக்தாதியின் தலைமையில் மேற்கொண்டது. போராட்டம் தொடங்கியது. எனினும் ஈராக்கின் தலைநகர் பக்தாதைக் கைப்பற்ற ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு முடியவில்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவர் பக்தாதியை தாங்கள் கைது செய்திருப்பதாக ஈராக் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
பக்தாதி அப்போது உலகில் பேசப்படாத ஒருவராக இருந்தபோதிலும், அமெரிக்காவும், ஈராக் அரசும் பக்தாதியை உயிருடன் பிடிப்பது அல்லது சடலத்தைக் கைப்பற்றுவது என்ற நோக்கிலேயே போராடி வந்தது. மீடியாக்களும் பக்தாதி கைதுசெய்யப்பட்டதை உறுதிசெய்த சில மணி நேரங்களில் அல்-ஜஸீரா அறிவித்தது ‘கைதுசெய்யப்பட்டவர் பக்தாதி அல்ல’.-இது பின்னர் உண்மையான தகவலாக உலகில் பரவியது.
29-06-2014 இஸ்லாமிய ஹிலாபத் ஆட்சியில் ஈராக்கும் சிரியாவும் எனும் (State in Iraq and Syria – ISIS ) ஐ.எஸ்.ஐ.எஸ்- இஸில் உலகுக்கு முதன் முதலில் அறிமுகஞ் செய்யப்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து மக்களுக்கிடையே சில சந்தேகங்களும் தோன்றின.
இவர்கள் இஸிஸ் என்றால் இஸில் யார்? ஐ.எஸ்.ஐ யார்? மாறாக அல்கயிதா எங்கே? தலிபான்களும் இவர்களா? போன்ற சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்ந்தன.
‘அல்கைதா இன் ஈராக்’ (AQI)
ஈராக்கிற்குள் அமெரிக்கா நுழைந்த 2003-2004 காலப்பகுதியில் ஈராக்கில் உருவான அமைப்பு
இஸ்லாமிய ஹிலாபத் ஈராக் (Islamic State of Iraq – ISI)
ஈராக்கில் அன்று ஆரம்பிக்கப்பட்ட புதிய அமைப்பு. இவ் அமைப்பில் ஏ.கியூ.ஐ யில் இருந்த உறுப்பினர்களும், ஈராக் முஜாஹிதீன் உறுப்பினர்களும் இணைந்து அமெரிக்கா இராணுவத்தினருக்கும் அதற்கு ஆதரவாக செயற்படும் ஈராக் அரசாங்கத்துக்கும் எதிராக தாக்குதலை ஒன்றிணைந்து ஐ.எஸ்.ஐ. என்ற இயக்கில் போராடி வந்தது. இவ் அமைப்பில் தான் அபூபக்ர் பக்தாதி இணைந்து போரிட்டு வந்தார்.
Islamic State in Iraq and the Levant- ISIL (இஸில்)
இஸில் என அழைக்கப்படும், இஸ்லாமிய ஹிலாபத் பிரதேசம் ஈராக்கிலிருந்து-லெவன்ட் எனும் அமைப்பாகும். இது ஈராக்கிலிருந்து லெவண்ட் வரைக்கும் இஸ்லாமிய ஹிலாபத் பிரதேசம் என்பதை வரையறுக்கிறது. இதன்படி, ஈராக்கிலிருந்து- சைப்ரஸ், துருக்கி (ஹதாய் மாநிலம் மாத்திரம்), இஸரேல், ஜோர்டான், லெபனான், பலஸ்தீன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் பிரதேசங்களும் உள்ளடங்கும்.
(State in Iraq and Syria – ISIS ) ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸிஸ்)
ஈராக் மற்றும் சிரியா இணைந்த இஸ்லாமிய ஹிலாபத் என்ற பெயரில் இவ்வமைப்பு தற்பொழுது பிரமாண்ட அளவில் இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் ஹலீபாக அபூபக்ர் பக்தாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1990 களிலிருந்து (ஈராக் போரிலிருந்து) யார் யாரெல்லாம் அரபு மற்றும் இஸ்லாமிய பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வந்தார்களோ, அத்தகைய தனிநபர்கள் மற்றும் மேலே கூறப்பட்ட இயக்க உறுக்கினர்களும் இணைந்து தற்பொழுது இந்த இஸிஸ் அமைப்பில் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர்.
தலிபானைப் போல் பாமர கொள்கையை மாத்திரம் கடைப்பிடித்து வரையறுக்காமல், பறந்த கொள்கையைக் கடைப்பிடித்து போராடி வரும் இஸிஸ் அமைப்பில் இணைவதற்கு உலகெங்கிலுமிருந்து போராட்ட உணர்வுள்ள இளைஞர்கள் சேர்ந்தவன்னமிருக்கின்றனர். அவற்றுள் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், அல்கைதா மற்றும் தலிபான்கள் போன்று ஒழிந்திருந்து வருடத்தில் ஒரு ஒலி/ஒளி நாடாவை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, குகைக்குள் குளிர்காயும் அமைப்பல்லாமல், களத்திலிருந்து போராட்டங்களை நேரடியாகவும், உடனுக்குடனும் சமூக வளைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர்.
அமெரிக்காவின் நவீன இராணுவ தளபாடங்களையும், ஆயுதங்களையும் இலகுவில் கச்சிதமாகக் கையாளக்கூடிய போர் திறனும் அனுபவமும் இஸிஸ் போராளிகளிடம் இருக்கின்றன.
பக்தாதி யார் என்பதைக் காண வைத்தகண் வாங்காமல் காத்திருந்தது உலகம். அதற்கு விடைகொடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் மோசுல் நகரின் ‘அல்-நூரி’ பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜூம்ஆ பிரசங்கத்தில் தன்னையும் தங்களது கொள்கையையும் உலகுக்கு தெளிவாக வெளிக்காட்டினார் பக்தாதி.
இதற்கிடையில் இவ்வமைப்பு இஸிஸ் வரைக்கும் நிற்குமா அல்லது இஸில் வரைக்கும் தொடர்ந்து போராடுமா என்ற சந்தேகம் மக்களுக்கிடையில் எழுந்துள்ளது. ஈராக் முழுவதுமோ அல்லது சிரியா முழுவதுமோ இன்னும் இஸிஸ் அமைப்பிடம் விழவில்லை.
ஒரு வேளை இஸிஸ் சிரியாவையும், ஈராக்கையும் முழுவதுமாகக் கைப்பற்றினால் அங்கு முழுமையான ஹிலாபத்தை அறிவிக்கும்.
ஆனால், 02-07-2014 இல் ‘அரபுலகத்திலிருந்து இஸ்லாமிய ஹிலாபத் ரோம் நகர் வரை செல்லும். அதன் பின்னர் ஐரோப்பாவரை நிலைநாட்டப்படும்’ என பக்தாதி தெரிவித்தார். அப்படியானால் இயக்கத்தின் பெயர் மீண்டும் மாற்றப்படவேண்டும் (?).
Published by




![iraq-ISIS-jihad_2940452b[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/iraq-isis-jihad_2940452b1.jpg?w=620&h=387)
Leave a comment