Category: Your Kattankudy
-
குருக்கள்மடத்தில் முஸ்லிம்கள் காணாமல் போனமை குறித்து விசாரணை
காத்தான்குடி: 1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் பகுதியில் கடத்தப்பட்டுக் காணாமல் போனதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் உறவினர்களிடமிருந்து பொலிஸாரால் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
-
‘தாதிகளை விடுதலை செய்ய ஈராக் அரசாங்கம் உதவவில்லை: சதாமின் நண்பர்களே உதவினர்’!
– SHM டெல்லி: ஈராக்கில் இஸிஸ் போராளிகளின் பிடியில் சிக்கித் தவித்த இந்திய தாதிகளையும், இதர இந்தியர்களையும் மீட்பதில் ஈராக் அரசும், ஈராக் ராணுவமும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதையடு படு புத்திசாலித்தனமாக மறைந்த சதாம் ஹூஸைனின் பாத் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடமும், போராளிகளுக்கு நெருக்கமானவர்களிடமும் இந்திய அரசே நேரடியாக தொடர்பு கொண்டு பேசி காரியத்தைச் சாதித்து அசத்தியுள்ளது.
-
‘குழுவாத நரபலிகளுக்கு எதிராக பிராத்திக்க வேண்டும்’ -ஜூம்ஆ உரையில் இமாம் சுதைஷ்
– MJ மக்கா: ‘உலகில் தற்பொழுது ஏற்பட்டுவரும் குழுக்களுக்கிடையிலான பிரிவினைவாத்தால் உலகம் இரத்த வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது. இந்நிலையிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்’ என புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் ஷரீஃபின் சிரேஷ்ட இமாம் அப்துர் ரஹ்மான் அல் சுதைஷ் குறிப்பிட்டார்.
-
அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்கு!
கொழும்பு: அண்மையில் பேருவளை மற்றம் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அல்ஜசீரா செய்தி சேவை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன்காரணமாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடரவுள்ளது.
-
‘எம்மை அழிக்க நினைப்பது பௌத்த மக்களை அழிப்பதற்கு சமமாகும்’-ஞானசார
கொழும்பு: பொதுபல சேனா என்பது வெறுமனே ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொதுபலசேனா என்பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்தையும் சிங்கள மக்களையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்பது பெளத்த மக்களை அழிப்பதற்கு சமமாகும். இதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
-
நெதர்லாந்து போராடி வெற்றி! அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவைச் சந்திக்கிறது
– MJ றியோ: இறுதிவரை மிக ஆர்வமாக இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் முதல் 90 நிமிடங்களும், அதனைத் தொடர்ந்த மேலதிக 30 நிமிடங்களிலும் நெதர்லாந்து மற்றும் கொஸ்டாரிகா அணிகள் கோல் எதுவும் போடாத நிலையில் சமநிலையில் நிறைவடைந்தது.
-
24 வருடங்களுக்குப் பின் ஆர்ஜன்டீனாவுக்கு ‘கூல்’ வெற்றி!
– MJ பிரேசிலியா: உலகக் கிண்ணப் போட்டியின் கால் இறுதிச் சுற்றின் 3வது போட்டியில் பெல்ஜியம் அணியை 1:0 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஆர்ஜன்டீனா அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகி இருக்கின்றது. போட்டியின் 8வது நிமிடத்தில் ஹிகுயன் கோலொன்றை ஆர்ஜன்டீனாவுக்குப் பெற்றுக் கொடுத்தார்.
-
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!
– SHM ஜகாத்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது.அந்நாட்டில் சிபோல்கா நகரின் தென்மேற்கில் 125 மைல்களுக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்தவின் உருவம் பொறித்த ரீ சேர்ட்டை அணிய மறுத்த அமைச்சர் வாசுதேவ!
பேருவளை: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பேருவளையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்களுக்கு அணியக் கொடுத்த ஜனாதிபதியின் உருவம் அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டை அணிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மறுத்துள்ளார்.
-
‘என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ கோஹ்லியை கெஞ்சும் இங்கிலாந்து கிரிக்கட் வீராங்கனை!
– SHM லண்டன்: விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொள்வதே தனது லட்சியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார் இங்கிலாந்து பெண் கிரிக்கெட் அணியின் வீராங்கனை டேனியலே யாட். வங்கதேசத்தில் இவ்வாண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை மண்ணை கவ்வ செய்யும் வகையில் கோஹ்லி 44 பந்துகளில் 72 ஓட்டங்களைக் குவித்தார்.
-
அரையிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் நெய்மாரை இழக்கிறது பிரேசில்! அதிர்ச்சியில் இரசிகர்கள்!!
– S-90 ரியோ டி ஜெனீரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் இறுதி நேரத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக நேர்ந்துள்ளது. அவர் உடல் நலம் தேற இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.