Category: Your Kattankudy
-
ஏறாவூருக்கு புதிய காழி நீதிபதி நாளை நியமனம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூரின் தற்போதைய காழி நீதிபதி முஹம்மது காசீம் அப்துல் மஜீத் மௌலவி அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுறுவதால், நாளை 01-08-2014 தொடக்கம் புதிய காழி நீதிபதியாக முன்னாள் ஏறாவூர் உலமாசபை தலைவரும், முன்னாள் ஏறாவூர் பிரதேச சபை தவிசாளரும், தற்போதைய முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாமுமான அப்துல் காதர் அப்துல் மஜீத் மௌலவி நியமனம் பெறுகிறார்.
-
நேற்று புதன்கிழமை மேலும் 106 காஸா மக்கள் ஷஹீத்
– MJ காஸா: இஸ்ரேலால் காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் எரிகணைத் தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை மாத்திரம் 106 பொதுமக்கள் ஷஹீதாகியுள்ளனர். காஸாவின் பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 16 மாணவர்களும், சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 17 பேரும், இதர தாக்குதல்களில் மீதமானோரும் ஷஹீதாகியுள்ளனர்.
-
தனக்கு வழங்கப்பட்ட அமெரிக்க யூதர்களின் விருதை திருப்பிக்கொடுத்தார் துருக்கி பிரதமர்
நியுயோர்க்: அமெரிக்க யூத கொங்கிரஸினால் வழங்கப்பட்ட விருதை துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகன் திருப்பி அளித்துள்ளார். இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பதாக எர்டோகன் மீது யூத கொங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையிலேயே குறித்த விருதை அவர் திருப்பி அளித்துள்ளார்.
-
கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்: கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது!
கொழும்பு: க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி கணித பாடத்தில் சித்திபெற வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் உயர்தரம் கற்க வாய்ப்பு வழங்கப்படும்.
-
தங்கள் நாட்டு ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் ஆடை அவிழ்த்த இஸ்ரேல் பெண்கள்
– AF-90 டெல் அவிவ்: உலகின் எந்த ஒரு நாட்டு பாதுகாப்பு படையும் எதிர்கொள்ளாத விமர்சனத்தை இஸ்ரேல் ராணுவம் சந்தித்துக்கொண்டுள்ள நிலையில், மற்றொரு பக்கம், வேறு எங்கும் கிடைக்காத கன்னிப்பெண்களின் ஆதரவும் இஸ்ரேல் ராணுவத்துக்கு கிடைத்து வருகிறது. அதுவும், ஆடையை அவிழ்த்துப்போடும் அளவுக்கு ஆதரவு சென்றுள்ளது.
-
காத்தான்குடியின் பெருநாள் தொழுகைகளும் விமர்சனங்களும்…
– ஏ.அப்துல் ஸத்தார் காத்தான்குடி: காத்தான்குடியில் கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த பெருநாள் தொழுகைகளுள், இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகைகளின் பின்னர் மக்களிடையே பல சலசலப்புக்கள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகிறது.
-
இஸ்ரேலுக்கான தூதர்களை திரும்ப பெற்றது சிலி, பெரு நாடுகள்
– SHM டெல் அவிவ்: காஸா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களைக் கண்டித்து அந்நாட்டுக்கான தூதர்களை சிலி மற்றும் பெரு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகள் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளன.
-
‘ஹஜ் யாத்திரிகள் அவதானமாக இருங்கள்’ – அமைச்சர் பௌஸி
கொழும்பு: இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படும் முகவர்களுக்குரிய கோட்டாக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் யாத்திரிகர்கள் அவசரப்பட்டு முகவர்களிடம் பணத்தை கையளிக்க வேண்டாமென அரசாங்க ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பெளஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வேட்புமனுக்கள் இன்றுமுதல் ஏற்பு: ஊர்வலங்களுக்குத் தடை
கொழும்பு: ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. மொனராகலை மற்றும் பதுளை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இஸிஸின் பெண்தேடும் படலம்: அலுவலகம் திறப்பு!
டமஸ்கஸ்: இஸிஸ் போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று அவர்களது ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இஸிஸ் அமைப்பின் திட்டமாகும்.
-
‘பலஸ்தீனியர்களின் தாய்மார்களையும் கொல்ல வேண்டும்’-இஸ்ரேல் பெண் எம்.பியின் வெறிப் பேச்சு!
– AF-90 டெல் அவிவ்: இஸ்ரேலின் முகம் எப்படிப்பட்டது. அவர்களின் உள்ளம் எவ்வளவு குரூரமானது. அவர்களின் நோக்கம்தான் என்ன என்பதை அறிய எங்குமே போக வேண்டாம். அவர்களின் வரலாறுகளைப் படிக்க வேண்டாம். இதோ ஒரு இஸ்ரேல் பெண் எம்.பியின் பேச்சைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
-
எரிகிறது காஸா: நேற்று நள்ளிரவிலிருந்து இஸ்ரேலின் எரிகணைகளால் காஸாவில் வீழ்த்தப்பட்ட ஷஹீதுகள் 100!
– MJ காஸா: நேற்று நள்ளிரலிவிருந்து காஸா மீது பலத்த ஆர்டிலரி ரொக்கட்டுக்களை இஸ்ரேல் ஏவிவருகின்றது. எப்போதுமில்லாதவாறு இந்நிமிடம் வரைக்கும் இடைவிடாது இஸ்ரேலின் எரிகணைகள் காஸாவுக்குள் வீழ்ந்து வெடித்தவண்ணமிருக்கின்றன.