நேற்று புதன்கிழமை மேலும் 106 காஸா மக்கள் ஷஹீத்

gaza– MJ

காஸா: இஸ்ரேலால் காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் எரிகணைத் தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை மாத்திரம் 106 பொதுமக்கள் ஷஹீதாகியுள்ளனர். காஸாவின் பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 16 மாணவர்களும், சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 17 பேரும், இதர தாக்குதல்களில் மீதமானோரும் ஷஹீதாகியுள்ளனர்.

சுமார் ஒரு மாதமாகத் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரைக்கும் 1336 காஸா மக்கள் ஷஹீதாகியுள்ளனர். 56 இஸ்ரேல் இராணுவ வீரர்கள் உட்பட 58 இஸ்ரேலியர்கள் ஹமாஸின் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். 5000 இற்கும் அதிகமான வீடுகள் இஸ்ரேலின் எரிகணைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன.

gaza

Published by

Leave a comment