‘பலஸ்தீனியர்களின் தாய்மார்களையும் கொல்ல வேண்டும்’-இஸ்ரேல் பெண் எம்.பியின் வெறிப் பேச்சு!

israel– AF-90

டெல் அவிவ்:  இஸ்ரேலின் முகம் எப்படிப்பட்டது. அவர்களின் உள்ளம் எவ்வளவு குரூரமானது. அவர்களின் நோக்கம்தான் என்ன என்பதை அறிய எங்குமே போக வேண்டாம்.  அவர்களின் வரலாறுகளைப் படிக்க வேண்டாம். இதோ ஒரு இஸ்ரேல் பெண் எம்.பியின் பேச்சைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எவ்வளவு அரக்கத்தனமாக, இதயமே இல்லாமல் பேசியுள்ளார் இந்த எம்.பி என்பது வியப்பாக உள்ளது.

‘அத்தனை பலஸ்தீனியர்களுக்கும் தாயே இல்லாமல் செய்ய வேண்டும். அத்தனை தாயார்களையும் கொல்ல வேண்டும்’ இதுதான் அந்தப் பெண் சொல்லியுள்ளது. இஸ்ரேலின் வலது சாரி யூதக் கட்சியான ‘ஹோம்’ கட்சியின் எம்.பியான அயலெட் சாக்கேத்தான் இப்படிப் பேசியுள்ளார்.

israel
அயலெட் சாக்கேத்

பலஸ்தீனியர்கள் அத்தனை பேருமே தீவிரவாதிகள் என்று இவர் குற்றம் சாட்டுகிறார். காஸா போரின்போது பாலஸ்தீனியர்களின் தாயாரையும் சேர்த்துக் கொல்லுமாறும் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து யூதப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், பலஸ்தீனியர்கள் தீவிரவாதிகள். அவர்களைக் கொல்லும்போது அந்த நச்சுப் பாம்புகளைப் பெற்றெடுத்த அவர்களின் தாயார்களையும் சேர்த்துக் கொல்ல வேண்டும். ஒருவரையும் விடக் கூடாது.

அவர்கள் சாக வேண்டும். அவர்களது ஒரு வீட்டைக் கூட விடாதீர்கள். இடித்துத் தரைமட்டமாக்குங்கள். அவர்கள் இனியும் உயிருடன் உலகில் நடமாடக் கூடாது.

அவர்கள் நமது எதிரிகள். வாழ விடக் கூடாது. அவர்களது ரத்தத்தால் நமது கைகளைக் குளிப்பாட்டுங்கள். அந்தத் தீவிரவாதிகளைப் பெற்றெடுத்த தாய்களுக்கும் இது பொருந்தும் என்று பேசியுள்ளார் இந்த வெறி பிடித்த பெண் எம்.பி.

சாக்கேதிதன் இந்தப் பேச்சுக்கு துருக்கி பிரதமர் ரிசெப் தய்யிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இனவெறிப் பேச்சு என்று அவர் வர்ணித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,  ஒரு இஸ்ரேல் பெண், பலஸ்தீனத் தாய்மார்களைக் கொல்ல வேண்டும் என்று பேசியுள்ளார். இஸ்ரேல் எம்.பி. யின் இப்படிப்பட்ட மன நிலைக்கும் ஹிட்லருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

Published by

Leave a comment